கிளிநொச்சி கனகாம்பிகைக் குள அம்மன் கோவிலில் சங்கி தொலைத்த அடியவர்!! அம்மன் குழந்தை வடிவில் வந்தாரா?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவை அப்படியே இங்கு பிரதி செய்துள்ளோம்……
இரணைமடு கனகாம்பிகை ஆலய திருவிழாவான
6ம் நாள் பகல் திருவிழாவில் ஆலயத்தில் ஒரு அடியவர் ஒருவரினால் 1 1/2 பவுன் தங்கச்சங்கிலி தவறவிடப்பட்டது.
.
பல முறை தேடியும் தங்க ஆபரணம் கிடைக்கவில்லை. அங்கு குடியிருந்த அடியவர் பலரின் கருத்து இதுவாக இருந்தது இப்போது தங்கப்பவுண் விற்கின்ற விலைக்கு கண்டெடுத்தவர்கள் தருவார்களா ? என்பதுதான் பலரது கதையாக இருந்தது. தங்கச்சங்கிலியை தவறவிடவர் அன்னையை வேண்டிக்கொண்டிருந்த வேளை கனாகம்பிகையின் அருளும் சிறுமியின் செயலும் சிலரை சிந்திக்க வைத்தது.
எப்படி என்றால் தவறவிட்ட தங்கச்சங்கிலியானது 4 1/2 வயது குழந்தையின் கண்ணில் பட்டிருக்கின்றது கண்டெடுத்த தங்கச்சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்திருந்தார். அதன் காரணமாக சிறுமிக்கு கனகாம்பிகை அம்பாள் ஆலய பரிபாலன சபையினர் வாழ்த்துக்களையும் அன்பளிப்பு பரிசில்களையும் வழங்கி கௌவப்படுத்தியிருந்தார்கள்.
அம்பாள் அருள் அகிலம் ஆளும்.



