மற்றுமொரு சிறுவனைக் கொலை செய்தது மட்டக்களப்பு வைத்தியசாலை!! (Photos)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கவனயீனம்
மற்றுமொரு சிறுவனை இழந்து துயருடன் வாழும் பெற்றோர்!!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல தடவை தலையிடி என கொண்டு சென்றும் மாணவனின் நோயை எது என நிதானம் செய்யாமல் வீடு வைத்தியசாலை என தினம் அழைந்து இறுதியில் சிறுவனை நடைப்பிணமாக படுக்கை உடன் மரணத்தை எதிர்பார்த்துகொண்டிருந்த மாணவனுக்கு இறைவனே சிறுவனினதும் பெற்றோரினதும் வேதனையை பார்த்து கருணை கொலை செய்தாரா???என வேதனைப்படும் அளவு செட்டிபாளையத்திலுள்ள பெற்றோர் சோகம் அவர் அனுபவித்த வேதனையான உணர்வுகள் வார்த்தைகளால் சொல்லிடமுடியாது.
செட்டிபாளையம் ஊற்றுமடுவை சேர்ந்த கிருஸ்ணானந்தம் தேனுஜன்(12வயது)
பாடசாலையிலும் அமைதியான மாணவன் புலமைப்பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்று சிறப்பான சித்தியடைந்தவன், கற்றல் அது சார்ந்த போட்டிகளில் திறமையாக எல்லோரும் விரும்பும் கீழ்படிவான மாணவனாக திகழ்ந்ததால் அணைவராலும் கவனத்திற்குள்ளாக்கப்பட்ட மாணவனாகராயிருந்தான்.
தேனுஜன் திடிரென்று இல்ல விளையாட்டு போட்டியில் விழுந்து தலைக்காயம் என்று மட்டக்களப்பு வைத்தியசாலை தனியார் வைத்தியசாலை என சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr.விஜி திருக்குமார் உட்பட மற்றைய எல்லோருடம் பல தடவை காட்டி மருந்துகளை பெற்று பெற்றோர்களின் கஸ்டத்தின் மத்தியிலும் இலட்சக்கணக்கில் செலவழித்து இருநாள் சென்ற உடன் நுண்ணுயிர் கொல்லி மருந்து சாதாரண தலையிடி ,சளி என கருத்தில்,கொண்டு சிகிச்சை வழங்கி வைத்தியசாலையிலிருந்து டிக்கட் வெட்டி மீண்டும் வீடு சேர்ந்தால் தலையிடி ,வாந்தி வந்த உடன் சிறுவனை தூக்கி ஓடி போய் மட்டக்களப்பு வைத்தியசாலை சென்றால் அதே சிகிச்சை அதே மருந்து பெற்றோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நம்பிக்கையிழந்து தமது உறவினர்கள் ஆதரவுடன் கண்டி வைத்தியசாலை கொண்டு சென்றால் அங்கு சகல பரிசோதனை செய்து மூளையில் புற்றுநோய் கட்டி இனி அது வளர்ச்சியடைந்துவிட்டது .
இதன் வளர்ச்சி 6வருடம் முதலே தொடங்கியிருப்பதனால்தான் இப்பொழுது சத்திரசிகிச்சை செய்தால் சிறுவன் உயிருக்கு ஆபத்து கோமா நிலைக்கு செல்லாமல் என ஆலோசனை வழங்க இனியென்ன பெற்றோர் ஒவ்வொர் ஆலயங்களாக சென்று நேர்த்திகடனையும் பூசைகளையும் செய்து சிறுவனை படுக்கையிலே சலம் ,மலம் அகற்றி தமது செல்ல மகனின் முகத்தை பார்த்து கொண்டிருப்பதே
அவர்கள் முழுநேரமாக செலவிட்டு கொண்டிருந்தார்கள்.
படைத்த இறைவனுக்கு பெற்றோரின் துயரம் பொறுக்கமுடியவில்லையோ தெரியாது கடந்த 20ம் திகதி சிறுவனின் உயிர் பிரிந்தது .
இப்பொழுது இந்த பதிவின் நோக்கமே ஓரே நோயின் அறிகுறியான கடுமையான தலையிடி ,சத்தி என கூறி சிறுவனை பெற்றோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொண்டு சென்றும் ஏன் அவர்களுக்கு கண்டி போன்ற தலையை பரிசோதனை செய்யும் பரிசோதனை வசதியில்லையா???அல்லது தொடர்ந்து இச்சிறுவனை பரிசோதித்த சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பரிசோதனைகளை செய்து பார்க்க உத்தரவுவிடவில்லையா????சாதாரண தலையிடி மூளையில் புற்றுநோய் கட்டியாக வளர்ச்சியடைந்த ஆரம்ப நிலைக்கு யார் காரணம்???
எது எப்படியோ இனியும் இப்படியான கவனயீனத்தால் எதிர்கால சந்ததிகள் அழிவது ஏற்றுக்கொள்ளமுடியாது.