இந்தியச் செய்திகள்கிசு கிசு

திருநாவுக்கரசுக்கு மாணவிகளை சப்ளை செய்த கில்லாடி மாணவியின் விபரம்!!

திருநாவுக்கரசு உள்பட 4 பேரால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு
இருப்பதாக தெரியவந்து உள்ளது. ஆனால் எத்தனை பேர் என்று தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து தாராளமாக புகார் செய்யலாம். அவர்கள்
விவரம் குறித்து ரகசியம் காக்கப்படும். திருநாவுக்கரசு இந்த செயலில் ஈடுபட
அவனுடன் படித்த தோழி ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார்.

அந்த பெண் மூலம்தான் அவன் ஏராளமான இளம்பெண்களின் செல்போன் எண்களை பெற்று
உள்ளான். எனவே அந்த பெண் யார் என்பது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்து
உள்ளது. அதை வைத்து நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த
வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக மாணவிகள், பெண்கள் முகநூலை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க
வேண்டும். அதில் எக்காரணத்தை கொண்டும் தங்களின் செல்போன் எண்ணை
குறிப்பிடக்கூடாது. அதுபோன்று தங்களின் புகைப்படத்தையும் பதிவேற்றம்
செய்யக்கூடாது. முகநூல் பயன்படுத்துவது ஒவ்வொருவரின் விருப்பம். அதில்
பெண்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வதன் மூலம் சிலர் தவறாக பயன்படுத்த
வாய்ப்பு உள்ளது.

மேலும் முகநூலில் முன்பின் தெரியாத நபர்கள் யாராவது நண்பர்களாக சேர்க்க
விருப்பம் தெரிவித்து இருந்தால் அவர்களின் விவரம் தெரிந்த பின்னர்தான்
சேர்க்க வேண்டும். அத்துடன் முன்பின் தெரியாத நபர்களுக்கு புகைப்படமோ,
வீடியோக்களோ அனுப்பி வைக்கக்கூடாது. யாராவது முகநூல் மூலம் புகைப்படம்
அல்லது வீடியோக்களை அனுப்பி வையுங்கள் என்று தொந்தரவு கொடுத்தால் தாராளமாக
புகார் செய்யலாம். அந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.