கிசு கிசு

வெளிநாட்டு மாப்பிளைக்கு கள்ளத்தொடர்பு சந்தேகம்!! கழுத்தை அறுத்தார் வவுனியா யுவதி!!

வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

வவுனியாவை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 32 வயது இளைஞனுக்கும் பெரியோர்கள் இணைந்து கடந்த மாதம் இந்தியாவில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இளைஞன் லண்டனுக்கும், பெண் வவுனியாவுக்கும் சென்ற நிலையில் சில நாட்கள் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தனர், இந்நிலையில் இளைஞனுக்கு பெண்னின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது,

அதன் பின்னர் இருவரும் தொலைபேசியில் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையொன்றில் தொலைபேசி காணொளி அழைப்பில் கணவன் காத்திருக்க அவர் முன்னிலையில் கத்தியை எடுத்துக்கொண்டு கழுத்தையறுக்க எத்தனித்துள்ளார்.

உடனடியாக அதிக சத்தத்தில் அந்த பெண் கதைத்த சத்தம் கேட்டு ஓடிவந்த தந்தை உட்பட்ட குடும்பத்தினர் கத்தியுடன் நின்ற பெண்ணை காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.