சற்று முன் நல்லூரில் மீற்றர் பொருத்தாது நின்ற ஆட்டோக்களுக் நடந்த கதி!!
நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் தவிச்ச முயல் அடிப்பது போல் அதிக கட்டணம் அறவிட்டு சேவையில் ஈடுபட்டு வந்த மீற்றர் பொருத்தாத ஆட்டோக்கள் இன்று பொலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டன. நல்லூர் அரசடி மற்றும் பல பகுதிகளில் இந்தச் சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. பொலிசாரைக் கண்டதும் சில ஆட்டோக்கள் ஓடி தப்பியுள்ளன. ஏனைய ஆட்டோக்களின் விபரங்கள் பொலிசாரால் பெறப்பட்டு சாரதிகள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
பொலிசார் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அந்த ஆட்டோக்கள் அதே இடத்தில் தரித்து நிற்கின்றன.

