புதினங்களின் சங்கமம்

குறை உயிராக இருந்த நாகம் கடித்து மாங்குளத்தில் ஜெகதீஸ்வரன் பலி!!

முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்துக்கு உட்பட்ட கிழவன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு அடித்து குற்றுயிராய் கிடந்த பாம்பினை கையினால் தூக்கியதில் பாம்பு கடிக்கு இலக்காகிய  நபர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(16) இரவு உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் கிழவன் குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் (வயது-47) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.