பதவியிலிருந்து விலகுகிறாரா வடக்கு ஆளுநர்? ஐனாதிபதியிடம் மூன்று மாத விடுமுறை கோரியிருப்பதாக தகவல்
வடக்கு மாகாண ஆளுநராக இருக்கும் திருமதி சாள்ர்ஸ் ஐனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் மூன்று மாத விடுமுறை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்சவினால் வடக்கு மகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட சாள்ர்ஸ் நாளை முதலாம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று மாத வழங்குமாறு ஐனாதிபதியிடம் கோரி உள்ளார்.
மருத்து விடுமுறையாகவே இந்த மூன்று மாத விடுமுறை கோரப்பட்டு உள்ளதாகவும் அந்தக் காலப்பகுதியில் ஆளுநரின் பணிகளை நிர்வாகம் முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் ஐனாதிபதியிடம் கோரியுள்ளார்.

