யாழில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ரமணன் சடலமாக மீட்பு
யாழ். வேலனை 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த இராசதுரை ரமணன் (வயது ௭ 52) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச்சம்பவம் நேற்று (16.04.2023) நடந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிணற்றுக் கட்டில் சறுக்கி விழுந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
