பளபளப்பாக இருக்கிறது என்பதற்காக பாம்பைத் தூக்கி சட்டைப்பையில் போட்டுக்கொண்ட கதையாகி விட்டது எனதருமை யாழ் மக்களின் நிலை.
சமூகவலைத்தளப் பதிவை அப்படியே தந்துள்ளோம்
தலையிலடித்துக்கொண்டோம். ஆதாரங்களுடன் முன்வைத்தோம், சமத்துவ வேடம் போடும் இவர்கள், வன்முறையினை மட்டுமே அறிந்த பேரினவாதிகள் என்று.
சபாநாயகரின் கல்வித் தகைமையிலிருந்து, இன்று வரை சொல்லியிருக்கின்ற அனைத்துமே பொய். இதற்குள் பல தடவைகள் அச்சுறுத்தல்கள் வேறு.
தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஒரு ஓரமாகத் தூக்கிப்போட்டுவிட்டு, எதையெல்லாம் ஒழிப்போம் என்று சொன்னார்களோ, அவை அனைத்தையும், அப்படியே செய்கிறார்கள். என்ன… அனுபவக் குறைவு. அதனால் மாட்டிக்கொள்கின்றனர்.
ஊழல் என்பது பணத்தினை கொள்ளையடிப்பது மட்டுமல்ல. அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்வதும் தான். வாக்குறுதிகளை மீறுவதும் தான்.
கல்வித் தகைமை – பொய்
கபிலனின் முகவரி – பொய்
வீதி திறப்புகள், காணி விடுவிப்புகள், சோதனைச்சாவடி அகற்றல் – பொய்
சம்பளம் வாங்காத சேவை – பொய்
சொகுசு வாகனங்கள் பாவிப்பதில்லை – பொய்
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம் – பொய்
நிகழ்நிலை காப்புச் சட்டம் நீக்கம் – பொய்
அரசியலமைப்பு சீர்திருத்தம் – பொய்
நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறை நீக்கம் – பொய்
மாகாண சபை தேர்தல்கள் – பொய்
இராணுவமயமாக்கல் நிறுத்தம் – பொய்
காணி அபகரிப்பு நிறுத்தம் – பொய்
அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கம் – பொய்
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு – பொய்
அதிகாரத் துஷ்பிரயோகம் நிறுத்தம் – பொய்
ஊடக சுதந்திரம் – பொய்
பொருளாதார சீர்திருத்தம் – பொய்
இந்திய ஒப்பந்தம் – பொய்
காணிப் பிரச்சனைக்கு தீர்வு – பொய்
அரசியல் கைதிகள் விடுதலை – பொய்
மத சம்பந்தமான நல்லிணக்கம் – பொய்
அத்தியாவசியப் பொருட்களின் விலைக் குறைப்பு – பொய்
மின் கட்டண குறைப்பு – பொய்
எரிபொருள் விலைக் குறைப்பு – பொய்
அரசியல் தலையீடற்ற தூதுவர் நியமனம் – பொய்
குடும்ப அரசியல் ஒழிப்பு – பொய்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விபரங்கள் – பொய்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான கைதுகள் நிறுத்தம் – பொய்
சிச்சி யின் றொக்கட் பொய்..
இதைவிட டட்லியின் ஹொட்டேல்..
12 லச்சம் விட்ஸ் கார்..
செம்மணி புதைகுழி தொடர்பாக ஹர்சன நாணயக்கார சொன்ன காதுவழிவந்த கதை என்பது பற்றி இளங்குமரன் இன்று சொன்னது மட்டும் உண்மை!
நல்லா உருட்டுங்கடா..
நாலு வருசம் கேட்டுத்தானே ஆக வேண்டும்
(பிரதி)

