புங்குடுதீவு தெற்கு கடலில் 02 பேர் தொழிலுக்கு சென்றவேளை நீரில் மூழ்கி ஒருவர் மரணம்!
நேற்று அதிகாலை புங்குடுதீவு தெற்கு கடற்பரப்பில் இருவர் மீன்பிடிக்கச் சென்ற வேளை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மற்றையவர் கரைசேர்ந்துள்ளார்.
உயிழந்தவர் புங்குடுதீவைச் சேர்ந்த
அன்பழகராஜன் ஜாக்சன் வயது (27) என்பவராவார்.
கடலுக்குச் சென்று கரைதிரும்பியவர் வழங்கிய தகவலையடுத்து கிராம மக்கள் கடலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது நேற்று காலை சடலம் மீட்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தெரியவருவதாவது இருவரும் கடலுக்கு சிறு தொழிலுக்கு சென்றவேளை கடலுக்குள் இருந்த பாதையில் வீழ்ந்து மூழ்கியதாக கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.



