யாழ் மின்சாரசபைக்கு ரகசியமான முறையில் சிங்களவர்கள் நியமனம்!
யாழ் மின்சாரசபையின் பிராந்திய அலுவலகத்தில் பணியாற்ற தென்னிலங்கையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அவர்களின் நியமனமும், பணிப் பொறுப்பேற்பும் இரகசியமாக நடந்து முடிந்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஒக்ரோபரில் பதவியேற்ற பின்னர், 61 சிங்கள இளைஞர்கள் யாழ் மின்சாரசபை பிராந்திய அலுவலகத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களின் நியமனத்தை நிறுத்தும்படி ரணில் அரசிடம் கூட்டமைப்பு வலியுறுத்தியபோதும் ரணில் அரசாங்கம் அதை கவனத்தில் எடுக்கவில்லை.
Advertisement
இந்தநிலையில் கடந்த நான்கு தினங்களின் முன்னர் இலங்கை மின்சாரசபையின் யாழ் அலுவலகத்தில் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேர் சிங்களவர்கள். இருவரே தமிழர்கள்.
கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், அரசை ஆதரிப்பதற்கு பிரதியுபகாரமாக இரா.சம்பந்தனிற்கு யாழ் போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர் நியமனத்தை நிரப்ப வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
அதில் சம்பந்தனின் சிபாரில் திருகோணமலையை சேர்ந்த சுமார் 140 வரையானவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை வடக்கில் பல இளைஞர், யுவதிகள் பட்டதாரிகளாகவும், உரிய கல்வித்தகுதியுடனும் வேலையற்று இருக்கின்ற நிலையில் பிறமாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

