ஸ்விகி நிறுவனத்தின் பொறுப்பில் திருநங்கை
ஆன்லைனில் புட் டெலிவரி செய்வதில் இன்று ஸ்விகி நிறுவனம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வீட்டில் இருந்துகொண்டு உணவை ஆர்டர் செய்து குடும்பத்துடன் சாப்பிடுவது சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இன்று வழக்கமாகிவிட்டது.
ஸ்விகி நிறுவனத்தின் பொறுப்பில் திருநங்கை
தற்போது தமிழகத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா என்ற திருநங்கை பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியின் தலைமை பொறுப்பிற்கு வந்துள்ளார்.
தமிழகத்தின் பொள்ளாச்சியில் பிறந்த சம்யுக்தா விஜயன் 10 ஆண்டுகள் அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தது வந்தார். 2017 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார்.
இதனால் ஸ்விகி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு இவர் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்விகியின் தலைமை பொறுப்புக்கு வந்தது குறித்து சம்யுக்தா கூறுவது, என் திறமையை மதித்து ஸ்விகி எனக்கு தலைமை பொறுப்பு கொடுத்ததுக்கு மிக்க நன்றி. இனி நானும் ஒரு அங்கமாக இருந்து இந்த நிறுவனத்தில் பணியாற்றுவேன். இந்திய கார்பரேட் நிறுவனங்கள் தற்போது திருநங்கைகளுக்கு ஆதரவு அளிக்க தொடங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
சம்யுக்தா