FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வடக்கில் பாதுகாப்பு தரப்பின் சிவில் பாதுகாப்பு தமிழ் ஊழியர்கள் யூரியூப் சனல்களில் உலா!!

வடக்கு, கிழக்கில்  பாதுகாப்புத் தரப்பில் பணியாற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர்களான தமிழ் இளைஞர்கள் பலர் தமிழ் யூரியூப்பர்களாக மாறி இலங்கை எங்கும் உலாவி வருகின்றனர் என சிங்கள சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுக்கான சிறப்புப் பயிற்சியை பாதுகாப்புத்தரப்பைச் சேர்ந்த விசேட பிரிவினர் வழங்கி வருகின்றார்கள் எனவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்குரிய சிறப்புக் கமராக்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்றவற்றை அவர்கள் பயிற்றுவித்துள்ளார்கள் எனத் தெரியவருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து அவர்களுடன் ஒட்டி உறவாடி அவர்கள் மூலம் இலங்கைக்கு ஏதாவது ஒரு வழியில் டொலர்களாக பணத்தை பெற்றுக் கொள்வதற்காக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. குறித்த யூரியூப்பர்கள் மூலம் புலம்பெயர் தமிழர்களில் உள்ள செல்வாக்கானவர்களை இலக்கு வைத்து இவர்கள் தொழிற்படுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் இவர்களை உலாவ வைத்து மக்களின் ஏழ்மை மற்றும் இலங்கையின் அழகான பிரதேசங்களை மையப்படுத்தியும் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் இலங்கை மீது சிறப்பான உணர்வை வரவைப்பதற்காகவும் டொலர்களை இலங்கைக்கு வரவழைத்து இலங்கையை பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கானவும் குறித்த யூரியூப்பர்கள் செயற்படுவார்கள். குறித்த யூரியூப்பர்களில்  நட்புறவு ரீதியான செயற்பாட்டால் இவர்களுக்கு மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு உயர்ந்து வருவதாகவும் சிங்கள சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

குறித்த யூரியூப்பர்கள் சில இடங்களில் குழுவாகவும் சில இடங்களில் தனித்தனியாகவும் தமது செயற்பாடுகளை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றார்கள் என சிங்கள சமூகவலைத்தளங்களில் இவர்களைப் பாராட்டி பதிவுகள் வெளியாகியுள்ளன. புலம்பெயர் தமிழர்களில் நல்லுள்ளங்களும் குறித்த யூரியூப்பர்களின் செயற்பாட்டால் இலங்கைகயில் உள்ளவர்களுக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் சிங்கள சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.