புதினங்களின் சங்கமம்

கொழும்பு- கண்டி வீதியில் உடைக்கப்பட்டது புத்தர்சிலை!! பெரும் பதற்றம்!! இராணுவம் குவிப்பு!!

இலங்கையின் ஏ1 நெடுஞ்சாலை எனப்படும் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஸ்யால பிரதேசத்தில் இன்று காலை முதல் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.

புனித நோன்புப் பொருநாளான இன்றைய தினம் பஸ்யால சந்தியில் புத்தர் சிலையொன்று சேதமாக்கப்பட்டு வீதியில் வைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் இந்த சம்பவத்தை அடுத்து எவரும் கைது செய்யப்படவில்லை. இதேவேளை கேகாலை – மாவநெல்ல பிரதேசத்தில் இதே போன்ற தொரு சம்பவம் இடம்பெற்றதை அடுத்து பாரிய விளைவுகள் ஏற்பட்டிருந்தன.

மாவநெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று சேதமாக்கப்பட்டதை அடுத்து முஸ்லிம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.