புதினங்களின் சங்கமம்

அரசியல் பிரமுகரின் மகள் மாயம்; நடந்தது என்ன? பரபரப்பில் கொழும்பு!

நீர்கொழும்பு அரசியல்வாதியின் மகள் ஒருவர் காணாமல் போன நிலையில் அவர் திருமணம் முடித்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 23 வயதான குறித்த யுவதி வரகாபொல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு இவர் திருமணம் செய்துகொள்ளும் நோக்குடன் இளைஞர் ஒருவருடன் சென்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதேவேளை கட்டான ஹல்பே நகரிலுள்ள பீட்டர் சில்வா மாவத்தையில் இருந்து காணாமல் போன இளைஞர்கள் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டதாகவும், மேலும் குறித்த இளைஞர்கள் யுவதியின் திருமணத்தில் சாட்சியாக இருந்ததாகவும் அறியப்படுகிறது.

அத்தோடு குறித்த இளைஞனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் முக்கிய உறவுகளைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

மேலும் திருமணத்தில் சம்பந்தப்பட்ட திருமண பதிவாளரை நீர்கொழும்பு காவல்துறையினர் துன்புறுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.