புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் அம்மனின் கண்களில் இரத்தம் வழிகின்றது!! படையெடுக்கின்றனர் பக்தர்கள்!! (Photos)

வவுனியாவில் இரத்தக்கண்ணீர் வடிக்கும் அம்மனை தரிசிக்க பெருமளவு பக்கதர்கள் படையெடுத்து வருகின்றனர்.

வவுனியா
– சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசனி மற்றும் நாகதம்பிரான்
ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிகிறது.

ஆலயத்தின் பூசகரான பெண் இன்று காலை ஆலயத்திற்குள் சென்று
பார்த்தபோது அம்மனின் சிலையில் இருந்து சிவப்பாக ஏதோ வடிவதை
அவதானித்துள்ளார்.

உடனடியாக அதனை துடைத்த அவர் மீண்டும் அவ்வாறு
கண்களில் இருந்து வருவதை தொடர்ந்து ஆலயத்தின் தொண்டர்களை அழைத்து
சம்பவத்தினை காட்டியுள்ளார்.

அவர்களும் அதனை துடைத்து பார்த்தபோது
மீண்டும் கண்களில் இருந்து இரத்தம் சிந்தியுள்ளது. இந்தத் தகவல் அந்தப்
பகுதி முழுவதும் பரவத் தொடங்கியது.

இதனையடுத்து நூற்றுக்கணக்கான
அடியவர்களும் அம்மனை தரிசிக்க வந்த வண்ணமுள்ளதுடன் அம்மனின் கண்களில்
இருந்து இரத்தம் சிந்துவது ஏன் என்ற அச்சம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.