புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு கொக்கிளாய் கடற் பகுதியில் பல கோடிரூபா பெறுமதியான திமிங்கல வாந்தி!! ஒருவர் கைது!! (வீடியோ)

022.01.23ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேசத்தின் முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றில் திமிங்கலத்தின் வாந்தியான அம்பர் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய,

முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையின் உதவியுடன் முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் N.V.பிரானந்து வயது 47 என்பவருடைய வீட்டில் இருந்து 1.85kg நிறையுடைய அம்பர் கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த வீட்டின் உரிமையாளர் முல்லைத்தீவு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நேற்று 24:01:23 முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலையில் படுத்தபட்டார்.

சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ஒரு லச்சம் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்ததுடன் அம்பரை மேலதிக பகுப்பாய்வுக்காக NARA நிறுவனத்திற்கு அனுப்புவதற்கு நீதிமன்று உத்தரவிட்டது.

அம்பர் ஆனது திமிங்கிலத்தின் குடல் பகுதியில் உற்பத்தியாகும் ஒரு பதார்த்தம் எனவும் இதனை உடமையில் வைத்திருந்தமை சட்டவிரோதமானது எனவும் முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

 

 வீடியோவிற்கு இந்த இணைப்பை அழுத்தி subscribe செய்த பின்னர் பார்வையிடலாம்