முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விபத்தில் 24 வயது டிலக்சன் பலி!!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நேற்று மாலை மரக்கறி வியாபாரி தீபன் அவர்களின் இறுதிச்சடங்கு இடம்பெற்றது.
இவரின் இறுதிச்சடங்கு முடித்து மயானத்தில் நல்லடக்கம் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் வீடுதிரும்பிய வழியில் வேகக்கட்டுப்பாடை இழந்து குறித்த விபத்து இடம்பெற்றதாக புதுக்குடியிருப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் ஜனநாதன் டிலக்சன் (வயது -24) ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.