புதினங்களின் சங்கமம்

யாழில் தெருவில் நின்று கொண்டிருந்த பொலிஸ் வாகனம் மீது டிப்பர் மோதியது!! மின் துாண்கள் முறிந்து மின்சாரமும் துண்டிப்பு!! (Video)

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மீசாலைப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தினை அடுத்து தென்மராட்சியின் பல பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

மீசாலையில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக பொலிஸாருடைய பேருந்து ஒன்று தரித்து நின்றிருக்கின்றது.

9.30 மணியளவில் யாழ்ப்பாணத்திருந்து கொடிகாமம் நோக்கிய திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனம் குறித்த பேருந்தின் மீது மோதி விபத்து நிகழ்ந்திருக்கின்றது.

இதன் போது வீதியில் நின்றிருந்த பேருந்து அருகிலிருந்த உணவகம் ஒன்றுகுள் புகுந்திருக்கின்றது.

அதேவேளை வீதியோரத்தில் காணப்படும் பிரதான மின் கம்பமும் சேதமடைந்தமையால் தென்மராட்சியின் பல பகுதிகளுக்குமான மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

May be an image of roadNo photo description available.