புதினங்களின் சங்கமம்

யாழில் ஆவா குழுக் காவாலிகள் சினிமாப்பாணியில் நடாத்திய தாக்குதலில் முன்னாள் போராளியும் காரணமா?? முழுவிபரம் (வீடியோ)

>யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (24) பகல் திரைப்பட பாணியில் ஆவா குழு ரௌடிகள் மோதலில் ஈடுபட்டனர். வாகனத்தால் மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டு, மோதலில் ஈடுபட்டனர்.

இந்த மோதல் பற்றிய மேலதிக விபரங்களை தமிழ்பக்கம் பெற்றது.

ஆவா குழுவில் செயற்பட்ட இரண்டு தரப்பினரே இந்த மோதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டு வெவ்வேறு வாள்வெட்டு குழுக்கள் ஈடுபட்டதாக தகவல் பரவியிருந்தது. எனினும், அது தவறானது.

ஆவா குழுவில் அங்கம் வகித்து, வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் முரண்பட்ட இரண்டு தரப்பினரே மோதலில் ஈடுபட்டனர்.

ஆவா குழுவின் பிரபல ரௌடிகளில் ஒருவரான நிஷா விக்டர் என்பவர் திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்.

அளவெட்டியில் உள்ள இன்னொரு ஆவா குழு ரௌடியான கனி என்பவரின் தாயாரின் மரணச்சடங்கு இன்று நடந்தது. கனி என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறிதுகாலம் செயற்பட்டதாக குறிப்பிட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானவர். அளவெட்டியில் 4,5 அடியாட்களை கொண்ட குழுவொன்றை தலைமைதாங்கி நடத்தி வருகிறார்.

மருதனார்மடம் பகுதியை சேர்ந்த மற்றொரு ஆவா குழு ரௌடி ஜெகன். மருதனார்மடம் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

இவர்கள் அனைவருமே ஆவா குழுவில் அங்கம் வகித்தவர்கள். தற்போது கனி தரப்பிற்கும், ஜெகன் தரப்பிற்குமிடையில் முரண்பாடு. ஜெகன் தரப்பின் மீது அண்மையில் வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கனி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது தாயார் காலமாகியுள்ளார். அதை முன்னிட்டு நேற்று அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று மாலையில் பின்னர்தான் அவர் வீட்டுக்கு சென்றார்.

அவரது தாயாரின் மரணச்சடங்கிற்கு நிஷா விக்டரும், 3 நண்பர்களும் போயிருந்தனர். அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஜெகன் தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிஷா விக்டர் தரப்பினர் பயணித்த காரின் மீது, ஜெகன் தரப்பினர் பயணித்த மகேந்திரா வாகனம் மோதியது.

ஜெகன் தனக்கு அச்சுறுத்தல் என கூறி, கடந்த சில மாதங்களாகவே தனது வாகனத்தில் இரும்பு கம்பி போன்றவற்றுடன் பயணித்துள்ளார். அத்துடன், 4,5 பேர் புடைசூழவே வலம் வந்திருந்தார்.

அவர்களே நிஷா விக்டர் குழுவை தாக்கியுள்ளனர். காரின் மீது இடித்து சேதமேற்படுத்தப்பட்ட பின்னர், ஜெகன் தரப்பினர் காருக்குள் இருந்தவர்களை கடுமையாக கடுமையாக தாக்கினர்.

இதில் காருக்குள் இருந்த 4 இளைஞர்களும் காயமடைந்தனர்.

இதே வேளை சுன்னாகத்தில் சினிமா பாணியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன 29 வயதுடைய சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவருக்கு உடம்பில் காயங்கள் காணப்படுவதனால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலதிக வீடியோக்களை எமது யூரியூப் சனலை இந்த இணைப்பை subscribe ெசய்த பின்னர் பாருங்கள் வாசகர்களே….