உறவு கொள்ளும் போது கஞ்சா தருவார்… பிரசவ வலியின் போது கஞ்சா பாவித்தேன் . யாழ் டான்ஸ் ரீச்சர்

யாழில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நடனம் பயிற்றுவிக்கும் இளம் குடும்பப் பெண்ணான ஆசிரியை பிரசவ வலியின் போது கஞ்சா பாவித்துவிட்டு தனியார் வைத்தியசாலைக்கு சென்ற சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியையின் கணவர் பிரபல நகை வியாபாரியாவார். இவர் மூலமே குறித்த ஆசிரியையும் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளார். ஆசிரியை தனது பிரசவத்திற்காக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இருந்துள்ளதை அறிந்த வைத்தியசாலை தாதியர்கள் இது தொடர்பாக மகப்பேற்று நிபுணரிடம் தெரிவித்துள்ளனர். அங்கு உடனடியாக வந்த நிபுணர் ஆசிரியையை பரிசோதித்த பின்னர் மிகவும் பாதுகாப்பான மகப்பேற்றை செய்து முடித்துள்ளார். அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையில் தனது கணவர் தன்னுடன் உடலுறவு கொள்ளும் போது கஞ்சா பாவிப்பதாகவும் அத்துடன் மாமிசம் சமைக்கும் போது அதிலும் பாவித்து அதனை தன்னையும் உட்கொள்ளுமாறு கூறியதால் தான் அதனை உட்கொண்ட பின்னர் சில நாட்களில் அதற்கு அடிமையாகி உள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக குறித்த வைத்தியநிபுணர் ஆசிரியை மற்றும் கணவனை அழைத்து போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்திற்கு செல்வதற்கு அறிவுறை வழங்கியுள்ளதாகவும் அத்துடன் மனநல வைத்தியரிடம் சிபார்சு செய்து அவர்களை அங்கு அனுப்பியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)