புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

துபாயில் அதிஸ்டலாபச் சீட்டிலுப்பில் இலங்கை இளைஞனுக்கு 81 கோடி ரூபா அதிஸ்டம்!!

இலங்கை இளைஞர்கள் அடுத்தடுத்து டுபாயில் அதிர்ஸ்ட இலாபச் சீட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளியெடுத்துள்ளனர்.

டுபாயில் தொழில் செய்துவரும் ரசிக்க என்கிற இளைஞன், இம்முறை பிக் டிக்கட் என்கின்ற டுபாயில் பிரபல்யமான அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் 15 மில்லியன் டிரஹம் (இலங்கை ரூபாயில் 81 கோடி ரூபா) முதல் பரிசாக வெற்றிகொண்டிருக்கின்றார்.

அபுதாபி ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றன.

சிவில் பொறியியலாளரான ரசிக்க, தன்னுடன் மேலும் ஐவரை இணைத்துக் கொண்டு இந்த டிக்கட் வாங்கியிருக்கின்றார்.

இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன் டுபாயில் மொஹமட் இம்ஷிக் என்கின்ற இலங்கை இளைஞன் 12 மில்லியன் டிரஹமை வெற்றிகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.