புதினங்களின் சங்கமம்

இலங்கையில் நேற்றைய கொவிட்-19 உயிரிழப்பில் 8 பேர் வீட்டிலேயே மரணம்!

இலங்கையில் கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாத் தொற்றாளர்கள் வீடுகளிலேயே உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 42 பேர் உயிரிழந்திருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் தகவலை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 08 பேர் வீடுகளிலேயே உயிரிழந்த நிலையில் குறித்த சடலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்தியதில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர ஏனைய 31 கொவிட்-19 மரணங்களும் வைத்தியசாலைகளில் நிகழ்ந்துள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 42 மரணங்களும் மே-11 ஆம் திகதி தொடக்கம் ஜூன்-03 ஆம் திகதி வரையான நாடக்ளில் நிகழ்ந்துள்ளது.

மே – 11 – ஒருவர்

மே – 14 – ஒருவர்

மே – 15 – ஒருவர்

மே – 17 -ஒருவர்

மே – 20 – ஒருவர்

மே – 23 – 02 பேர்

மே – 24 – ஒருவர்

மே – 26 – ஒருவர்

மே – 28 – ஒருவர்

மே – 29 – ஒருவர்

மே – 30 – 03 பேர்

மே – 31 – 11 பேர்

ஜூன் – 01 – 11 பேர்

ஜூன் – 02 – 03 பேர்

ஜூன் – 03 – 03 பேர்

இவ்வாறு மே-11 முதல் ஜூன்-02 வரை பெண்கள் 17 பேர் மற்றம் ஆண்கள் 25 பேர் என 39 பேரும் நேற்றைய தினம் மூவருமாக 42 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்து முதல் முறையாக ஆயிரத்து அறுநூறைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.