புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பப்ஜி கேம் விளையாடுவதில் சச்சரவு!! அண்ணணை குத்திக் கொன்ற தம்பி!!

p>கிளிநொச்சியில் பப்ஜி தொலைபேசி கேம் விளையாடியதில் ஏற்பட்ட சச்சரவில், தம்பியின் கத்திக்குத்து தாக்குதலில் அண்ணன் உயிரிழந்துள்ளார்.

<

தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று (09) இந்த சம்பவம் நடந்தது.

தம்பியின் தொலைபேசியின் அண்ணன் பப்ஜி தொலைபேசி கேம் விளையாடியுள்ளார். அண்ணன் நீண்டநேரம் கேம் விளையாடுவதால், தனது தொலைபேசி டேட்டா முடியப் போவதாக தம்பி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டு, தம்பி கத்தடுத்து அண்ணனின் நெஞ்சில் குத்தியுள்ளார்.

அண்ணன் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார்.

தருமராசா தவசீலன் (37) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டார். தம்பியை பொலிசார் கைது செய்தனர்.

கொல்லப்பட்டவரின் சடலம் தருமபுரம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.<