மட்டக்களப்பில் எனது அம்மாவை காணவில்லை கண்ணீருடன் மகன் முறைப்பாடு..!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவில் உள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த தனது தாயாரை காணவில்லையென அவரது மகன் முறைப்பாடு அளித்துள்ளார்.
47 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான சடாச்சரம் தேவலஷ்மி என்பவரே காணாமல் போயுள்ளார்.
கடந்து 22 ம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அவரது மகன் நேற்று (27) காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொரிசார் காணாமல் போனவர் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக 065-2056936 என்ற கொக்கட்டிச்சோலை காவல் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

