புதினங்களின் சங்கமம்

ஏ9 பரந்தன் வீதியில் நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம்!!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் A9 வீதியில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் எ விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்தனர்.

முல்லை வீதியில் இருந்து ஏ9 வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளை யாழில் இருந்து வவுனியா சென்ற தனியார் பஸ் பாதசாரி கடவையில் வைத்து முட்டி தள்ளியது.
பரந்தன் பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக இ.போ.ச பஸ்ஸுடன் தனியார் பஸ் போட்டி போட்டு ஓடி வந்த போதே இவ் விபத்து இடம்பெற்றது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயனித்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் குழந்தை ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு அம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

Image may contain: one or more people and outdoorImage may contain: one or more people, people sitting and motorcycleImage may contain: outdoor