FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஒழிப்பு பிள்ளைகளுக்கு விடுதலையா?

ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஒழிப்பு
பிள்ளைகளுக்கு விடுதலை, பெற்றோருக்கு நின்மதி. அன்பிற்கும், ஆளுமைக்கும் அடிப்படை.

ஆண்டு ஐந்து புலமைப் பரிசிலுக்கான பரீட்சை என்பது நடைமுறையில் பிள்ளைகளுக்கானதாக அன்றி அது பெற்றோர்களுக்கானதாகவே காணப்படுகிறது. இது அறிவியல் ரீதியில் பிள்ளைகளின் மூளைவளர்ச்சிக்கு எதிராகமூளையில் பூட்டப்படும் இரும்புச் சப்பாத்தாகவே அமைந்துள்ளது. இது பிள்ளைகளின் இயல்பான ஆக்கத்திறன் வளர்ச்சிக்குப் பெரிதும் எதிரானது. ஆனால் காலனிய ஆதிக்க கல்விமுறைக்குப் பழக்கப்பட்ட இலங்கையின் கல்வியியலாளர்களும், அரசியல்வாதிகளும், பெற்றோர்களும் கல்வியை ஒருவகை இராணுவ ஒழுக்கத்திற்கு ஊடாக பார்க்கப் பழகிக் கொண்டதன் விளைவாக இப்பிழையான பரீட்சையை ஆதரிக்கின்றனர்.
காலனிய ஆதிக்க சிந்தனை முறையின் பரிசாக இராணுவ ரீதியான சட்டாம்பிள்ளைத்தனமும் பொலீஸ் அதிகார முறைமையும் கல்விக்குள் இயல்பாகவே குடிபுகுந்து கொண்டன.

அறிவிற்கு அன்பு சால்பு என்பதற்குப் பதிலாக அறிவிற்கு அதிகாரம் அடிப்படையாய் அமையலாயிற்று. சுயமான ஆக்கத்திறன் விருத்திக்கு ஏதுவாக கல்வி அமைவதற்குப் பதிலாக ஒன்றைப் போல் இன்னொன்று என்ற வகையில் ஒருவகை அச்சுப்பிரதி எடுத்தலாக பிள்ளைகளுக்கான கல்விக் கொள்கை அமைந்தது.
இநத்ப்பூமியில்பிள்ளைகளுக்குகாண்பதெல்லாம்புதியது.ஆதலால் அவர்களுக்கு ஒன்றின் மீது இயல்பாகவே ஒரு புதிய பார்வை இருக்கும். ஆனால் பெரியவாக் ள் பழக்கப்பட்ட தமது பார்வைக்கு ஊடாக பிள்ளையும் அதே

பொருளைப் பார்க்க வேண்டுமென்ற வறண்ட சிந்தனையைப் பிள்ளைகள் மீது திணிப்பதான கல்விமுறை எப்போதும் தவறானது.
வசதியற்ற திறமையான ஏழை பிள்ளைகளை அடையாளங்கண்டு அவர்களை மேற்கொண்டு சிறப்பாகப் படிக்க வைப்பதற்கேற்ற நிதி உதவியை செய்வதற்காக ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் இது அவ்வாறு அமையவில்லை. வசதிபடைத்த பெற்றோரின் பிள்ளைகள் பெரும் பணச் செலவில் பிரத்தியேக தனியார் வகுப்புக்களுக்கு இரவு, பகலாக அனுப்பப்பட்டு ஒருவகை அச்சுவார்ப்புக்களாக அவர்கள் பரீட்சையில் சித்தியடையச் செய்யப்படுகின்றனர். இதில் ஏழைப் பிள்ளைகள் இயல்பாகவே பின் தள்ளப்பட்டு விடுகின்றனர்.

அதேவேளை மேற்படி வசதிபடைத்த பெற்றோரின் பிள்ளைகளை நகர்ப்புறங்களிலுள்ள வசதிபடைத்த தரமான பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக இப்பரீட்சையைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் வசதியற்ற ஏழைப் பிள்ளைகள் பின்தள்ளப்பட்டு மேலும் கவனிப்பாரற்ற பாடசாலைகளில் கல்வி கற்கவேண்டிய அவலநிலைக்கு உள்ளாகின்றனர்.
வசதிபடைத்த பெற்றோரின் பிள்ளைகள் தமது செல்வத்தை வசதிபடைத்த பாடசாலைகளுக்கே குவிக்கின்றனர். மாறாக வசதிபடைத்த பெற்றோரின் பிள்ளைகளும், வசதியற்ற ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளும் ஒரே பாடசாலையில் படிக்க நேரும் போது வசதிபடைத்த பெற்றோரின் செல்வம் இப்பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவியாய் அமைந்து ஏழைப் பிள்ளைகளும் வசதியான சூழலில் படிக்கும் வாயப்பு அதிகரிக்கும்.

வருமானம் குறைந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கே புலமைப் பரிசில் வழங்கப்பட வேண்டும் என்பது நியதி. ஆதலால் வசதிபடைத்த பெற்றோரின் பிள்ளைகள் சித்தியடையும்போது அநத்ப்பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படமாட்டாது. அத்துடன் ஏழைப் பிள்ளைகளுக்குரிய புலமைப் பரிசில்களையும் வசதிபடைத்த பெற்றோரின் பிள்ளைகள் அடையும் சித்தியால் தடுக்கப்பட்டுவிடுகிறது.

இங்கு வசதிபடைத்த பெற்றோருக்கு கிடைக்கும் நன்மை இரண்டு வகைப்படும். ஒன்று நகர்புற உயாந்த பாடசாலைகளில் அப்பிள்ளைகள் படிக்க அனுமதி கிடைக்கும். இரண்டாவதாக பிள்ளைகள் அடையும் சித்;தியை அடிப்படையாக வைத்து பெற்றோர்கள் வறண்ட பெருமைவாதத்தை வளர்த்துக் கொள்வார். அதேவேளை ஏழைப் பிள்ளைகளின் பெற்றோர்கள் இரண்டு வகைகளில் நேரடியாக பாதிக்கபப்டுகினற்னர். ஒன்று தமது பிள்ளைகள் தகுதியற்றவர்கள் என்றதாழ்வு மனப்பாங்கை அடைகின்றனர். இது பிள்ளைகளுக்கும் பொருந்தும். இவ்வாறு பிள்ளைகள் தாழ்வு மனப்பாங்கு அடையும் போது அதனால் ஏற்படும் பாதிப்பின் அடிப்படையில் ஏழைப் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வளர்ச்சி வேகத்தை இழந்து விடுகின்றனர்.

சித்தியடையும் பிள்ளை தனது சொந்த திறமையால் அன்றி வசதிபடைத்த சூழலினால் ஏற்படும் செயற்கையான திணிப்பின் வாயிலாக அது சித்தியடைகிறது. அதேவேளை சித்தியடையாத பிள்ளைகள் திறமையற்றவர்கள் என்பது அர்த்தமல்ல. அவர்களுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாமல் இருக்கும் அதேவேளை செயற்கையான வாய்பபு;க்களினால் வசதிபடைத்த பெற்றோரின் பிள்ளைகள் முன்னிலைக்கு வநது; விடுகின்றனர்.

நடைமுறையில் மேற்படி பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைவது பிள்ளைகல்ல பெற்றோர்தான் என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. மேலும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள் பல பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை அடைய முடியாது போவதையும், புலமைப் பரிசில் சித்தியடையாத பிள்ளைகள் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை அடைவதையும் நடைமுறையில் காணலாம்.

இவை அனைத்திற்கும் அப்பால் அறிவியல் மற்றும் கல்வியியல் என்ற இரண்டின் அடிப்படையிலும் இப்பிரச்சினையை ஆராய வேண்டியது அவசியம். முதலாவது பிள்ளைகள் இயந்திரங்களாக ஆக்கப்படுகின்றனர். கல்வி ஒரு திணிப்பாக மாறுகிறது. இது பிள்ளைகளின் அனைத்துவகை இயல்பிற்கும் எதிரான ஒருவகை கை விலங்காகவும், கால் விலங்காகவும் அமைகிறது.
பெற்றோரும், பிள்ளைகளும் ஒருவகை இராணுவ ஒழுக்கத்திற்கு உட்பட்டவர்களாக மாறி, இரவு-பகலாக இதயமற்ற இயந்திரமாக செயற்பட வேண்டிய நிலை உருவாக்கப்படுகிறது. அதிகாலையில் இருந்து பின்னிரவு வரை வாரத்தின் ஏழு நாட்களும் பிள்ளைகள் “படிப்பு” என்னும் ஒரேயொரு யாந்தீரிகச் செயற் சூழற்சிக்கு
உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் பண்டிகைக்கால மகிழ்ச்சிகளையும், விழாக்களையும், கொண்டாட்டங்களையுங்கூட இழக்கின்றனர்.

அதிகாலையில் எழுந்ததும் வீட்டுப் படிப்பு, பள்ளிக்குப் போகுமுன்பு பிரத்தியேக கல்விநிலையப் படிப்பு, பின்பு பள்ளிப் படிப்பு அதன் பின்பு மீண்டும் பிரத்தியோக கல்விநிலையப் படிப்பு இவை அனைத்திற்கும் அப்பால் வீட்டிற்கு வந்ததும் வீட்டு பரீட்சைவகையான பெற்றோரின் படிப்பித்தல் என்பதும் நிகழ்கிறது. சுமாராக காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணிவரை இந்த பச்சிளம் பாலகர்கள் பெற்றோரால், சகோதரக் ளால், அயலவர்களால், பிரத்தியேக ஆசிரியாக் ளால், பாடசாலை ஆசிரியாக் ளால் கயிறாகத் திரிக்கப்படுவதுடன் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள்கூட தமக்குத் தெரிந்த கேள்விகளினால் பிள்ளைகளின்
மூளைகளைத் துளைத்திடுகின்றனர். அப்போது பிள்ளைகள் பதில் சொல்லத் தவறினால் தமது வறண்ட கௌரவத்தின் பேரால் பெற்றோர் பிள்ளைகள் மீது சிறீப் பாய்கின்றனர்.

மொத்தத்தில் பிள்ளைகள் 6 வயதில் இருந்து 10 வயது வரை இராணுவ சித்தரவதை முகாமிற்குள் அகப்பட்டவர்களாய் மனதாலும், உடலாலும், உள்ளத்தாலும், எண்ணங்களாலும் சித்தரவதைக்கு உட்படுகின்றனர். இதனால் இவர்களது மனங்கள் மருத்துப்போய் காயடிக்கப்பட்ட மூளையுடன் வெறுப்பும், விரத்தியும், சினமும், கோபமும் கொண்ட அன்பற்ற பிள்ளைகளாய் வளர்கின்றனர். இதைத்தான் நாம் கல்வி என்பதன் பேரில் உற்பத்தி செய்து வருகிறோம். இவர்களிடம் வன்முறைக் கலாச்சாரம் சாதாரண விடயங்கள் எல்லாவற்றிலுமேவெளிப்படும். பிள்ளைகள் தம் வெறுப்பைக் காட்டும் போது…
“இது கலியுகம், பெற்றோரை பிள்ளைகள் மதிக்காத காலம்” “நன்றிகெட்டதுகள்”
போன்ற பொன்மொழிகள் பெற்றோர்களின் வாயிலிருந்து உதிரும்

300 கோடி ஆண்டுகால உயிரியியல் அனுபவத்தினதும், 30 இலட்சம் ஆண்டுகால மனிதயின அனுபவத்தினதும் ஒரு சிறப்பான தொகுதியே „அறிவு‟ என்பதாகும். இநத் கோடிக்கணக்கான ஆண்டுகால அறிவுத் தொகுதியில் மனிதன் தனக்குத் தேவையான சில பகுதியை மட்டும் திட்டமிட்டு அறிந்து கொள்ளும் முறையே „கல்வி‟ என்பதாகும்.

மனிதன் தனது முன்னோரின் அனுபவத்தில் இருந்து பெறக்கூடிய அறிவைப் பெற்;று அதன் வாயிலாக தனது ஆக்கத்திறனை வளர்ப்பதற்கான ஒரு மார்க்கமாகவே கல்வியை வடிவமைத்துக் கொள்கிறான். எனவே இங்கு கல்வியின் அடிப்படைநோக்கம் “ஆக்கத்திறன்” விருத்தி என்பதாகும்.

சிங்கத்திற்குப் பிறப்பலகாகக் காணப்படும் வெட்டுப்பல்லு, உடல்வாகு என்பவற்றின் அடிப்படையில் அதன் ஆக்கத்திறன் காணப்படுகிறது. ஆனால் அதன் வெட்டுப் பற்கள் மேலும் அதிகரிக்கப்படப் போவதில்லை. அதன் உடல்வாகில் அடிப்படை இயல்பில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. எனவே அதனது ஆக்கத்திறன் இலட்சோப இலட்ச ஆண்;டுகளாய் ஒரேமாதிரி இருக்கும். ஆனால் சிங்கத்தைவிடவும் வேட்டைக்கான உடற்பலம் குறைந்த மனிதனது ஆக்கத்திறன் தொடர் வளர்ச்சியடைந்து சிங்கக் கூட்டத்தையே ஒரு மனிதன் தனது கருவியில் பயன்படுத்தும் சுண்;டுவிரல் அழுத்தத்தால் கட்டுப்படுத்தி ஆட்சிபுரிகிறான்.

இவ்வகையில் ஆக்கத்திறன் வளர்ச்சி என்பதே உயிரியியல் மற்றும் மானிடவியல் வளர்ச்சியின் முதுகெலும்பாகும். இந்த ஆக்கத்திறனை வளர்க்க கல்வி ஏதுவாக இருக்க வேண்டுமே தவிர ஆக்கத்திறனை காயடிக்கும் வகையில் சுய ஆக்கத்திறன் வளர்ச்சிக்கு எதிரான வகையில் கல்வி அமையக் கூடாது. புலமைப் பரிசில் பரீட்சையில் பிள்ளைகல்ல பெற்றோரே சித்தியடைகின்றனர் என்பது மேற்படி சுய ஆக்கத்திறன் வளர்ச்சிக்கு எதிரான ஒரு பேறுபேறாகும்.

அறிவு வளர்ச்சிக்கு கல்வி – சுயம் – ஓய்வு – அன்;பு என்பன அவசியமாகும். ஒரு நாணயத்தின் இருபக்கமென ஓய்வும் கல்வியின் மறுபக்கமாகும். ஆனால் புலமைப் பரிசில் பரீட்சையின் பேரால் பிள்ளைகள் ஓய்வற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஓய்வும் கல்வியின் ஒரு பகுதி என்ற அடிப்படை நிராகரிக்கப்படுவதைக் காணலாம். அதாவது ஓய்வின்றி மீள் ஆக்கத்திற்கும், புத்தூக்கத்திற்கும் இடமில்லை. எனவே பிள்ளைகளுக்கு ஓய்வு மிகவும் அடிப்படையானது. இந்த ஓய்வானது பல உன்னத விடயங்களை பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் வழங்குகிறது.
ஓய்வு பிள்ளைகளுக்கும், பெற்றோர்களும் இடையேயான உறவை அதிகரிக்கிறது. பெற்றோர் பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும். பிள்ளை வளர்பபு என்பது சோறும், சீலையும், பிரத்தியேக வகுப்புக்களுக்கான பணம் கொடுத்தலும் அல்ல. மாறாக அன்பும், அரவணைப்பும், பரஸ்பர உரையாடல்களும் பிள்ளை வளர்ப்பின் முக்கிய அம்சங்களாகின்றன.

“பிதா, மாதா, குரு, தெய்வம்” என்ற ஓர் உன்னதமான கூற்று எம்மத்தியிலுண்டு. அதாவது பிதா தெய்வத்திற்குச் சமனானவர், மாதா தெய்வத்திற்குச் சமனானவர், குரு தெய்வத்திற்குச் சமனானவர். இதன்படி பிதா – மாதா – குரு ஆகிய மூவரின் பாத்திரமும் தெய்வத்திற்கு நிகரானது என்பதே இதன் பொருளாகும். ஆதலால் ஒரு பிள்ளையின் அறிவு – ஆற்றல் – ஆக்கத்திறன் என்பனவற்றில் மேற்படி பிதா – மாதா – குருவின் பாத்திரம் அவரரவர் நிலையில் உன்னதமானதும், ஓர் இலக்கை நோக்கிய மூன்று கிளைகளுமாகும்.

வெறும் பள்ளிப் படிப்பும், பரீட்சைப் பேறுபேறுகளும் மட்டும் கல்வியாகாது. பெற்றோருடனான உரையாடலும் அறிவைப் பெறும் மாhக் ;கந்தான். ஓய்வு நேரங்களை அதிகரித்து பிள்ளைகளை பல்வேறு அனுபவச் சூழல்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டிய தலையாய பொறுப்பு பெற்றோருடையது. அத்தகைய புதிய புதிய சூழல்களில் பிள்ளைகளின் அறிவு சுமையின்றி நடைமுறைக்கு ஏற்ப தன்னியல்பாக வளரும். வீட்டிற்கு வெளியேயான பல்வகைச் சூழல்களும், பல்வகை மனிதர்களுடனான சந்திப்புக்களும் பிள்ளைகளினது அறிவை இயல்பாக மேம்படுத்தும், புடமிடும்.

மேற்படி வாய்பபுக்களை தடுக்கும் வகையில் புலமைப் பரிசில் பரீட்சை பிள்ளைகளை சிறைவைத்து மிருகக்காட்சிச் சாலை பிராணிகளாக ஆக்கிவிடுகிறது. அவர்கள் அன்பையும், நடைமுறை வாழ்விற்கான சூழலையும், கிரகிக்க வேண்டிய பத்து வயதிற்குட்பட்ட பொன்னான காலத்தை இழந்து விடுகின்றனர்.

புலமைப் பரிசில் பரீட்சை ஒழிக்கப்பட வேண்டுமென்ற சிந்தனை தமிழ் – சிங்கள அறிஞர்கள் மத்தியில் ஓரளவு இருக்கவே செய்தது. 1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவியலாளர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் மேல் மட்டத்தில் இதற்கான ஒரு கலந்துரையாடல் நிகழ்நத் து. அப்போது புலமைப் பரிசில் பரீட்சை ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் என்ற முடிவிற்கு அவர்கள் வந்த போதிலும், புலிகள் கல்விக்கு எதிரானவாக் ள் என்ற கருத்து கல்வி மோகங்கொண்ட தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எழுந்திடும் என்;;ற அச்சத்தின் காரணமாக அம்முடிவு பின்போடப்பட்டது.

அவ்வாறு புலிகள் தரப்பில் மேற்படி புலமைப் பரிசில் பரீட்சை ஒழிக்கப்பட வேண்டும் என்று சிந்தித்த 29 ஆண்டுகளின் பின்பு இன்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலமைப் பரிசில் பரீட்சையை ஒழிப்பதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டிருப்பது ஒரு நல்ல விடயமேயாகும். அதாவது உயர் குழாத்தினர் இதனை இப்போதுங்கூட இலகுவில் ஏற்றுக்கொள்வார்கள் என்றில்லை. இது ஒருவகையில் அறியாமையும், தவறான, பிழையான, தீங்கான மோகமுந்தான். எப்படியோ இது ஒழிக்கப்படுவது நல்லது என்ற உண்மையை பெற்றோர்களும், பெரியோர்களும், கல்வியாளர்களும், அறிஞர்களும், அரசியல்வாதிகளும் ஏற்று ஆதரிக்கவும், பின்பற்றவும் வேணடும். ஒருவகையில் ஜனாதிபதி சிறிசேன செய்யும் ஒரேயொரு நல்ல காரியமாக கல்வி வரலாற்றில் இது அமையக்கூடும்.

விரும்பியவர்கள் பரீட்சை எழுதலாம் என்ற ஒரு தளம்பல் முடிவு இங்கு முன்வைக்கப்படுவதைப் பார்க்கும் போது இது நிறைவேறுவதற்கான வாய்ப்புக்கள் கடினமானவையெனத் தோன்றுகிறது. அவ்வாறு நிறைவேறினால் பிள்ளைகளுக்கு விடுதலை, பெற்றோருக்கு நின்மதி, ஆக்கத்திறன் வளர்ச்சிக்கு வழிவகை, அன்பும் – பண்பும் நிறைந்த அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படை என்ற முக்கியத்துவத்தை எல்லாம் இநத் புலமைப் பரிசில் பரீட்சை ஒழிப்பு வழங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மு திருநாவுக்கரசு