புதினங்களின் சங்கமம்

வெலிகமப் பகுதியில் இன்று அதிகாலையிலிருந்து கடும் பதற்றம்!! முஸ்லீம்கள் சுற்றி வளைப்பு!!

வெலிகம – கோட்டகொட பகுதியில் இன்று -03- திங்கட்கிழமை அதிகாலை பதற்றநிலை ஏற்பட்டதாக
அங்கிருந்து கிடைக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனந்தெரியாத நபர்கள் ஊர் எல்லையில் காத்திருப்பதாகவும், அவர்களில் சிலர் ஊருக்குள்
உட்புகுந்துள்ளதாகவும் கிடைத்த தகவல்களை அடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.

எனினும் பொலிசார் விரைந்து வந்துள்ள போதிலும், பொலிசார் முன்நிலையிலேயே ஒரு முஸ்லிம்
நபர் தாக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அப்பகுதிக்கு இராணுவத்தினரும் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் வீதிகளில் உள்ள முஸ்லிம்களை விரட்டுவதிலேயே பாதுகாப்புத் தரப்பு குறியாக
உள்ளதாகவும், சிங்கள இளைஞர்களை திருப்பி அனுப்புவதில் எத்தகைய கவனமும் செலுத்தவில்லை
எனவும் ஊர் மக்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெலிகம, கொட்டாகொட பகுதிக்குள் மர்ம கும்பல் ஒன்று நுழைய முற்பட்டமையினால் இந்த பதற்ற
நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையறிந்து அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடியுள்ளனர். இதன் காரணமாக மர்ம கும்பலின்
முயற்சி பலனளிக்காமல் திரும்பிச் சென்றுள்ளனர்.

அதன்பின்னர் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விரைந்து பாதுகப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டனர்.

அந்தப் பகுதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெலிகம, கொட்டாகொட பகுதியில் அமைதியான நிலைமை காணப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.