ஊர்காவற்துறையில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சசீபன் கெற்றியான் எனும் ஒன்றரை வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோருடன் தேவாலய வழிப்பாட்டுக்கு சென்ற குழந்தை , பெற்றோர் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை , குழந்தை தேவாலய வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளது.
திடீரென குழந்தையை காணதமையால், பெற்றோர் தேடிய வேளை , குழந்தை தேவாலயத்தின் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த நிலையில் கண்டுள்ளனர்.
உடனே குழந்தையை மீட்டு , ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு குழந்தை அனுப்பப்பட்டது.
போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது.
