யாழ் சங்கானையில் தலைவிரித்தாடும் போதைப்பாவனை!! போதைக்காவாலிகளால் மக்கள் பீதியில்!. நடு வீதியில் பெண்களுடன் நடக்கும் பாலியல் சீண்டல்கள்!! (Video)

யாழ்.சங்கானை நகரினை அண்மித்த பகுதிகளில் போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு கழிவுக் காவாலிகள் பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது மோசமாக அதிகரித்துள்ளது.
சங்கானை சிவப்பிரகாசம் மகாவித்தியாலத்திற்கு அருகில் அருகிலுள்ள மதகில் தினமும் போதப்பொருள் பயன்படுத்திவிட்டு ஒன்றுகூடும் காவாலிகள் வீதியை மறித்து நின்று மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பதால் பாடசாலைகளுக்கும் அருகிலுள்ள இரு கல்விநிலையங்களுக்கும் செல்லும் மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அத்துடன் சங்கானை நகரின் மல்லாகம் சந்தியின் முதலாம் ஒழுங்கையிலும் மல்லாகம் வீதியிலுள்ள பசாஜ் சேவிஸ் நிலைய சந்தி மற்றும் அருகிலுள்ள ஒழுங்கைகளிலும் கஞ்சா வெறியில் கூடிநிற்கும் காவாலிகள் மாணவிகள் இளம்பெண்களின் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துவருகின்றனர். இச்சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்களில் பலர் பாடசாலை செல்லாத 18 வயதிற்கு குறைந்த பதின்ம வயதுக் காவாலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் போதைப் பொருள் கடத்தலுக்கு இச்செய்தியில் காணப்படும் சிவப்புநிற 200-0060 இலக்கமுடைய முச்சக்கரவண்டி பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையிலிருந்து 100 மீற்றர் தூரமுடைய பிளைக் வீதியிலுள்ள வெற்றிலைக்கடை உட்பட அப்பகுதில் பல இடங்களில் உயிர்க்கொல்லி போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுகிறது.
பெயருக்குபல பொது அமைப்புகள் இருக்கிறதாக கூறப்பட்டாலும் இவர்களும் எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.பொலிஸ் உயர்மட்டம் மற்றும் ஆளுனர் உடனடியாக இதில் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

May be an image of 6 people May be an image of 8 people, road and treeMay be an image of 3 people, people standing, outdoors and treeMay be an image of 7 people, people standing, tree, road and street

May be an image of 6 people, bicycle, tree and road

error

Enjoy this blog? Please spread the word :)