புதினங்களின் சங்கமம்

இரு பெண்களை நிர்வாணமாக்கி வீதியால் இழுத்துச் சென்று. கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கிய காட்சிகள் (வீடியோ)

மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் குழு வீதியில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இரண்டு பெண்களையும் அந்த ஆண்கள் குழு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ITLF (பழங்குடியினர் தலைவர்கள் மன்றம்) என்ற அமைப்பு பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் குகி-சோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இக்கொடூர சம்பவம் மே 4ஆம் திகதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மே 18 அன்று காங்போக்பி மாவட்டத்தில் சைகுல் காவல்துறையினரால் பூச்சிய முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. எஃப்ஐஆர் இன் படி, “800 முதல் 1000 அறியப்படாத குற்றவாளிகள்” மீது பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. எஃப்ஐஆர் நாங்போக் செக்மாய் காவல்துறைக்கு அனுப்பப்பட்டது, இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

வன்முறை கும்பல் பைனோம் கிராமத்தில் உள்ள வீடுகளை எரித்ததாகவும், அதிலிருந்து தப்பியோடிய ஐந்து பேர் கொண்ட குழுவைத் தாக்கியதாகவுபுகார் கூறப்பட்டுள்ளது. தப்பியோடிய குழுவில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் இருந்துள்ளனர். வன்முறை கும்பலால் முதலில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பின்னர் பெண்களை உடைகளை களைய கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று ITLF அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் 20 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மற்ற இரண்டு பெண்கள் தப்பி ஓடிய நிலையில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் அந்த கொடூர தாக்குதலை தடுத்த நிறுத்த முற்பட்டபோது வன்முறை கும்பலால் அடித்து கொல்லப்பட்டார் என்றும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சம்பவத்தன்று இரண்டு பெண்களை வன்முறை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மே மாதம் 3 ஆம் திகதி இன வன்முறை வெடித்தபோது சுராசந்த்பூரில் குகி இன ஆண்களால் மைதேயி இன பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறி பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட ஒரு பெண்ணின் படம் மே வைரலானது. இந்தச் செய்தி பொய்யானது என்று பின்னர் தெரிய வந்தது.

இந்த செய்தி உண்மையென நம்பிய மைதேயி இன ஆண்கள், பழவாங்குவதற்காக இந்த கொடூரத்தை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 வயதான பெண் தகவல் வழங்குகையில், தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி விட்டு அடித்து சித்திரவதை செய்ததாகவும், பின்னர் வயல் நிலத்தில் படுக்கச் சொன்னதாகவும், பலாத்காரம் செய்யப் போவதாக குறிப்பிட்டு, 3 ஆண்கள் சுற்றி நின்றதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் பலாத்காரம் செய்யவல்லை.

தமது இன பெண்களுக்கு உங்கள் இன ஆண்கள் என்ன செய்தார்களோ, அதையே உங்களுக்கும் செய்யப் போகிறோம் என கூச்சலிட்டதாக தெரிவித்தார். இளம் பெண்கள் இருவரே கூட்டு வல்லுறவுக்குள்ளாகியதாக தெரிவித்தார்.