புதினங்களின் சங்கமம்மருத்துவச் செய்திகள்

மாதவிடாய் சமயத்தில் வலி இல்லாது இருப்பதற்கு இதைச் செய்யுங்கள்!!

மாதவிடாய் நாட்கள் என்பது பெண்களுக்கு மிகவும் வலி மிகுந்த நாட்கள் என்பதை அனைவரும்
அறிவோம். அன்று தீட்டு என்ற பெயரில் பெண்களுக்கு மூன்று நாட்கள் முழுமையான ஓய்வு
கிடைத்தது. இன்று என்ன வலியாக இருந்தாலும் பெண்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை.

காலையில் வீட்டு வேலைகள் என ஆரம்பித்து ஆப்பிஸ் குழந்தைகள் பின் வீட்டு வேலை என மாதவிடாய்
நாட்களிலும் ஓய்வின்றி வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும்.

இதனால் ஒரு சிலருக்கு மாதவிடாய் மாதத்தில் இருமுறை வந்துவிடும் ஒரு சிலருக்கு இரண்டு
மாதத்திற்கு ஒருமுறை வரும். இன்று நாம் பார்க்கப் போவது மாதவிடாய் தாமதமாகாமல் சரியான
முறையில் வருவதற்கான மருத்துவம்.

இதற்கு தேவையானது: எள்ளு, நாட்டு கருப்பட்டி அல்லது சர்க்கரை. தேன். முதலில் நாட்டு
சர்க்கரை மற்றும் எள் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தூளாக்கிக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு மாதவிடாய் வந்து சரியாக 24 நாட்களில் இந்த மருந்தை சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் முறை ஒரு கரண்டி எள் மிக்ஸுடன் ஒரு கரண்டி தேன் கலந்து நன்றாக மிக்ஸாக்கி
மூன்று நாள் காலை சாப்பிட்டு வாருங்கள். சரியாக 28 நாட்களில் வலி இன்றி மாதவிடாய்
வந்துவிடும்.

அதன் பின் மருந்து வேண்டாம் தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டால் போதும் அதன் பின்
சாதாரணமாகவே வந்துவிடும்..!