யாழில் மிக நன்றாகப் படிக்கும் மாணவர்களை குறி வைக்கும் போதை வியாபாரிகள்!! நேற்றும் ஒரு மாணவன் உயிர் மாய்த்தான்!! கல்வியை சீர் குலைக்கும் திட்டமிட்ட சதியா?

ஹெரோய்ன் போதை பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், தவறான முடிவெடுத்த உயிரை மாய்த்துள்ளார்.
யாழ். மருதடி – புத்தூர் மேற்கை சேர்ந்த இளைஞரே இவ்வாறு விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கல்வியில் திறமையாக திகழ்ந்த குறித்த இளைஞன், உயர் தரத்திற்கு தெரிவான பின்னர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பாடசாலையில் இணைந்துள்ளார். அங்கு அவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சான்று பெற்ற சிறுவர் பாடசாலையிலும் இளைஞன் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தான் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் கடந்த ஒரு மாத காலமாக ஹெரோய்னை நுகர முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இதே வேளை யாழ்ப்பாணத்தில் மிகவும் திறமையாக கற்கும் மாணவர்களை குறி வைத்து போதைப் பொருள் வியாபாரிகள் இயங்கி வருவதாகவும் யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களை இவர்கள் திட்டமிட்டு குறி வைத்து போதைப் பொருள் வியாபாரத்தை செய்வதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் வியாபாரம் செய்வது தென்னிலங்கையின் சதியா என கேள்வி உள்ளாகியுள்ளது. ஏனெனில் போதைத் தடுப்பில் ஈடுபடும் சம்மந்தப்பட்ட துறையினர் சிறு சிறு வியாபாரிகள் மற்றும் போதைப் பொருள் பாவிப்பவர்களை கைது செய்கின்றார்களே தவிர பெரும் புள்ளிகளை திட்டமிட்டு காப்பாற்றி வருவதாக சமூகவலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

error

Enjoy this blog? Please spread the word :)