சாராயம் விலை உயர்வு!! யாழில் சாராயத்திற்கு பதிலாக ஓடிக்கலோன் குடித்த குடும்பஸ்தர் பலி!!
மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த நபரொருவர் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (25) இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், ரயில் நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாது, மதுபான போத்தல்களின் விலையும் அதிகரித்துள்ளது.
மதுபானம் வாங்க முடியாத நிலையில், இவர் தொடர்ச்சியாக ஓடிகலோன் குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
