புதினங்களின் சங்கமம்

“ஆரம்பத்தில ஃபன்னா தொடங்கினான்,சேர்.பிறகு விட முடியுதில்ல!!

“ஆரம்பத்தில ஃபன்னா தொடங்கினான்,சேர்.பிறகு விட முடியுதில்ல. ஒரு நாளைக்கு அடிக்கிறதுக்கு 1500ரூவா வேணும் சேர்.. இது ஆளையும் தின்னுது காசையும் தின்னுது.. நிப்பாட்டோனும் எண்டு நினைக்கிறன். ஆனா பைத்தியம் பிடிக்குமாய் போல கிடக்கு” வெடித்து அழவும் தொடங்கினான்..
 
//“சேர் வயித்து நோ தாங்க முடியேல்ல.. வயித்துக்குள்ள ஏதோ செய்யுது. பிளீஸ் ஏதாவது மருந்து தாங்கோ.. செத்து போயிடுவன் போல கிடக்கு”
“பொறு அப்பன் முதல்ல இரு.. என்ன பிரச்சினை எண்டு சொல்லு.”
“இருக்க ஏலாது சேர். வயித்துக்குள்ள ஏதோ உருட்டுது”
இருக்கமுடியாமல் இங்கும் அங்குமாக தவித்து கொண்டிருந்தான் அந்த இளைஞன். இருபதுகளில் வயது இருக்கலாம். ஒட்டி உலர்ந்த தேகம். உட்குழிந்த கண்கள். உணர்ச்சிகளற்ற முகம். எண்ணெய் காணாத பரட்டை தலை. பார்க்கவே புரிந்து கொண்டேன். இருப்பினும் கேள்விகளைத் தொடர்ந்தேன்.
“எத்தினை நாளாக நோகுது….”
“சேர் நான் பவுடர் அடிக்கிறனான். இப்ப விடோனும் எண்டு நினைச்சு மூண்டு நாளா விட்டிட்டன். ஆனால் என்னால முடியேல்ல.. ஏதாவது ஒரு மருந்து தாங்கோ” கெஞ்சினான்.
நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை. இத்தகைய நடத்தை மாற்றங்களை ஒரே மருந்தில் தீர்த்துவிடவும் முடியாது. அவனுடன் பேசுவதுடன் அவனை ஆற்றுப்படுத்த மட்டுமே அந்த நேரத்தில் முடியும். உரிய உளநல வைத்தியரிற்கு சிபாரிசு செய்துவிட்டு தற்காலிகமாக வலியை குறைக்க ஆவனவும் செய்தேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இருபத்து மூன்று வயது இளைஞன் அவன். கடந்த ஒன்றரை வருடங்களாக போதை மருந்திற்கு அடிமையாகி தினமும் பாவிப்பதாக கூறினான். ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்கு வேலைக்கு சென்ற சமயத்தில் இதனை பழகியதாகவும் கூறினான்.
” ஆரம்பத்தில ஃபன்னா தொடங்கினான் சேர் பிறகு விட முடியுதில்ல. ஒரு நாளைக்கு அடிக்கிறதுக்கு 1500ரூவா வேணும் சேர்.. இது ஆளையும் தின்னுது காசையும் தின்னுது.. நிப்பாட்டோனும் எண்டு நினைக்கிறன். ஆனா பைத்தியம் பிடிக்குமாய் போல கிடக்கு” வெடித்து அழவும் தொடங்கினான்..
“சரிடா இப்பிடி அடிக்கிறது வீட்டில கண்டுபிடிக்க மாட்டினமா”
“இல்லை சேர் குடிச்ச ஆக்கள் தான் குழப்படி விடுவினம். இது அப்பிடி இல்லை சேர். அடிச்சா ஒம்பது பத்து மணித்தியாலம் அப்பிடியே மிதப்பம். அதனால பேசாம வீட்டில வந்து படுத்திடுவன். வேலைக்களை எண்டு வீட்டிலை நினைப்பினம். ஒண்டும் கேக்க மாட்டினம்” என்றான் விரக்தியாக..
இது ஒரு உதாரணம் மாத்திரமே….
ஏறத்தாழ பத்து பேர் இதுவரையில் போதை மருந்தினால் மாத்திரமே இறந்து போய் உள்ளனர்.. நாளாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அத்துடன் இதலிருந்து வெளிவரும் வழி அறியாமல் தற்கொலைகள் செய்வதற்கான சந்தர்ப்பங்களும் அதிகரிக்கலாம்.
அத்தனை முன்னணி பாடசாலைகளிலும் தாராளமாய் உலாவுவதாக பத்திரிகைகள் சொல்கிறது.. இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் இருந்தும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக ஒருபோதும் அவை நடைமுறைப்படுத்தப்பட போவதில்லை.
அன்பின் பெற்றோர்களே!
உங்கள் குழந்தைகளை காப்பாற்ற வேண்டுமாயின் நீங்களே முயற்சி எடுங்கள். பிள்ளைகளை கண்காணியுங்கள்.
நடத்தை மாற்றங்களை அவதானியுங்கள்.
சந்தேகப்படும் படியாக இருந்தால் உரிய தரப்பில் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்..
அவர்களை காப்பாற்றுங்கள்.
கைவிட்டு விடாதீர்கள்..\\
?? : மருத்துவர் Uthayaseelan Katkandu ♥️