திருகோணமலை பொதுவைத்தியசாலை இருட்டறைக்குள் இளம் தாதிய ஜோடிகள் ஜல்சா!! உயிருக்கு போராடிய நோயாளி பரிதாபமாக பலி
கடமை நேரத்தில் அறைக்குள் ஜோடியாக படுத்துறங்கிய தாதியர்களால் நோயாளி ஒருவர் கவனிப்பாரற்று பரிதாபமாக பலியான சம்பவம் ஒன்று திருகோணமலை பொதுவைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முந்தினம் குறித்த துர்ப்பாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த சில நாட்களிற்கு முன்னர் முச்சு விடுவதற்கு சிரமமான நிலையில் நோயாளர் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காகாக அவர் ICU ற்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு போதுமான பராமரிப்புக்கள் வழங்கப்படவில்லை என உறவினர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொரும்பாலான தாதிகள் புதுமுக தாதிகளாக இருந்ததோடு வினைத்திறனான முறையில் சேவையாற்ற தெரியாதவர்களாகவும் அநாகரீக வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதாகவும் உறவினர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அன்று இரவு சுமார் 10 மணியளவில் அறை ஒன்றிற்குள் ஆண் பெண் என இரு தாதியர்கள் உள்நுளைந்ததாகவும் அதிகாலை 5.50 மணியளவிலேயே சோம்பல் முறித்து இருவரும் வெளியே வந்ததாகவும் நேரில் கண்ட உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிகாலை 3 மணியளவில் குறித்த நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த இயந்திரத்தில் நோயாளி இறந்துபோனதற்கான சைகைகள் காட்டப்பட்டிருந்ததாகவும் ஆனால் காலை 6 மணிக்கே நோயாளி இறந்ததாக தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நோயாளியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக அரச நிறுவனம் ஒன்றில் கணவன் மனைவி என இருவரும் கடமையாற்றும் பட்சத்தில் அவர்கள் வெவ்வேறு பிரிவுகளிற்கு மாற்றம் செய்யப்படுவார்கள். ஒன்றாக சேர்ந்திருந்து கடமையோ அல்லது சேவையோ செய்வதற்கு அரச நிதிமுறைகள் அனுமதிப்பதில்லை
இவ்வாறான சூழ்நிலையில் அண்மையில் திருமணமான பொரும்பாண்மை இன தாதிகள் இருவரை ஒன்றாக ஒரே இடத்தில் பணிக்கு அமர்த்தியதோடு ஒரே நேரத்தில் கடமை செய்யவும் ஒன்றாக படுத்துறங்கி உறவு வைத்துக்கொள்ள வழி அமைத்து கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
உள்ளே நுளைந்தால் கிருமி தொற்று வந்துவிடும் என உறவினர்களைற்கும் ஏனையவர்களிற்கும் தெரிவித்துவிட்டு மூடிய அறைக்குள் நடப்பது யாரிற்கு தெரிய போகின்றது என்ற நற்பாசையில் உயிரிற்கு போராடும் நோயாளி அருகில் பாட்டும் கூத்தும் கும்மாளமாக இருக்கும் இவர்களை தண்டிக்க யாரும் இல்லையா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பொதுவாக அவசர விடுதிகளிலே பணியாற்றும் தாதியர்கள் அனுபவம் மிக்கவர்களாகவும் குறித்த துறையில் மேலதிக பயிற்சி பெற்றவர்களாகவும் இருப்பதுவே பொதுவான நடைமுறை. ஆனால் இங்கு அண்மையிலேயே சூம் தொழில் நுட்பம் மூலம் படிப்பை முடித்து வெளியேறிய தாதியர்களை கடமைக்கு அமர்த்தியுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் நோயாளர் பராமரிப்பில் சிங்கள தமிழ் பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஒரு நோயாளிக்கு ஒரு தாதி என்ற வகையிலேயே கடமையில் இருந்தாலும் பல நேரங்களில் நோயாளிகள் இல்லாமல் சும்மா இருப்பதாகவும், சிங்கள நோயாளர்களை கவனிப்பது போல தமிழ் நோயாளர்களை கவனிக்க மறுப்பதாகவும், தமிழ் நோயாளர்களின் உறவினர்களை கொண்டே நோயாளியை சுத்தப்படுத்தும் வேலைகளை செய்விப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களால் உரிய அதிகாரிகளிற்கு முறையிட்ட போது முதலில் மறுத்ததாகவும் பின்னர் நோயாளியின் உறவினரால் இரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தை காட்டியதும் அத்துமீறி உள்ளே நுளைந்து வீடியோ எடுத்தாய் என உள்ளே தூக்கி போடுவோம் என மிரட்டி விரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எது எப்டியாயினும் போன உயிர் திரும்பி வர போவது இல்லை. ஆனால் கடமை நேரத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட புதுமுக தாதியர்களை உரிய அதிகாரிகள் தண்டிக்காது விடின் மேலும் பல இழப்புக்கள் இதுபோலவே திரைமறைவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும்.
நண்பனுக்காக திருகோணமலையிலிருந்து விமல்

