புதினங்களின் சங்கமம்

திருகோணமலை வைத்தியசாலை வைத்தியரின் கவனயீனத்தால் பறிப்போன இளைஞனின் உயிர்!! நடந்தது என்ன!?

திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைத்தியர் சிலரின் கவனயீனத்தால் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று முந்தினம் (19) பதிவாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறக்கக்கண்டி நாலாம் வட்டாரத்தில் வசித்து வந்த இஸ்ஸதீன் முஹம்மட் தஸ்லீம் (29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நடந்தது என்ன??
குச்சவெளி தனியார் தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் குறித்த நபருக்கு கடந்த வெள்ளிக்கிழமை வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த நபர் தனியார் மருந்தகம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய வயிற்று வலி குணமடையாத நிலையில் கடந்த சனிக்கிழமை 17 ஆம் திகதி பிற்பகல் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரின் நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நேற்று முந்தினம் அதிகாலை 3 மணியளவில் மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால் இது தொடர்பான அறிவித்தல் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவிற்கு ஆரம்பத்தில் தெரியப்படுத்தப்படவில்லை.

பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிகாலை 3.30 மணியளவில் அனுமதி பிரிவில் அதே சமயம் கடமையிலிருந்த வைத்தியர் நோயாளியை உரிய முறையில் பார்வையிட தவறியுள்ளார்.

குருதி அமுக்கம் பார்க்கவும் இல்லை. நோயாளியை அருகில் சென்று ஏனைய விபரங்களை சோதிக்கவும் இல்லை.
உண்மையில் குறித்த நோயாளி உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியவர் என்பதை அவர் தீர்மானிக்கவில்லை.

எழுந்தமானமாக சாதாரண மருத்துவ விடுதிக்கு மாற்றியுள்ளார். நோயாளியின் தீவிர தன்மைக்கு ஏற்பவே நோயாளியுடன் தாதி ஒருவரும் சென்றுள்ளார்.

இதனை கூட குறித்த வைத்தியர் யோசனை செய்யவில்லை என்பதோடு குறித்த வைத்தியரிற்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ் இழுபறிநிலையில், விடுதி இலக்கம் 17 ல் அதிகாலை 3.50 மணியளவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு முன்வரிசையில் கட்டில் வழங்கப்பட்டு நோயாளிக்குரிய உயிர்க்குறிகளை பரிசோதித்த தாதி ஒருவர் நோயாளியின் நோய்நிலை பற்றி கடமை வைத்தியரிற்கு தொலைபேசியில் கூறியுள்ளார்.

நோயாளி விடுதியில் அனுமதிக்கப்பட்ட சமயம் விடுதியில் இருக்கவேண்டிய கடமை வைத்தியர் விடுதியில் இல்லை.
இவரிற்கு நோயாளி அனுமதி தொடர்பாக தொலைபேசி மூலம் தாதியர்கள் தெரியப்படுத்திய போதும் தொலைபேசி வாயிலாக அதை செய்,. இதை செய் என கட்டளையிட்டுள்ளதாகவும் உள்ளக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையில், நிலாவெளி வைத்தியசாலையில் இருந்து நோயாளியை மாற்றம் செய்த வைத்தியர் குறித்த விடுதிக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு நோயாளி உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உட்பட வேண்டியவர் என்றும் மல வாசல் உடாக குருதி வெளியேறுவதையும் தெரிவித்து உங்கள் விடுதியில் தவறுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளர் என்பதனையும் காலம் தாழ்த்தினால் நோயாளியின் உயிருக்கு ஆபத்தாகும் என்பதனை தான் குறிப்பிட்டு அனுப்பியும் சாதாரண விடுதிக்கு அனுமதித்தமை தொடர்பாக தாதி ஒருவரிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

உடனடியாக குறித்த தாதியும் அதே கடமை வைத்தியரிற்கு மீண்டும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு நிலாவெளி வைத்தியர் கூறியதை தெளிவுபடுத்தியுள்ளார்.

அதன்பின்னர் தான் வருவதாக வைத்தியர் பதிலளித்துள்ளார். அப்போது சுமார் நேரம் 4.30 மணி.

இவ்வாறிருக்க நோயாளிக்கு வைத்தியர் எழுதிக்கொடுத்து தாதியர்களால் எடுக்கப்படும் குருதி மாதிரிகளும் எடுத்து அனுப்பப்பட்டுள்ளதோடு நோயாளிக்கு சேலைன் ம் போட்டப்பட்டுள்ளளது.

பின்னர் சிறிது நேரத்தில் குருதி சேகரிக்கும் இடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பின் மூலம் நோயாளிக்கு நோயாளிக்கு குருதி சிவப்பணுக்கள் மிகமிக குறைவாக 4 என வந்துள்ளதாகவும் உடனடியாக குருதி மாற்றீடு செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலும் குறித்த வைத்தியரிற்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் வைத்தியசாலை வளாகத்திற்கு அருகில் அவர் இருந்தும் உரிய நேரத்தில் வர தவறியுள்ளார். கவனயீனத்தால்

இந்நிலையில் காலை 5.30 மணியளவில் தாதியர்கள் தங்களது வேலைகளை ஆரம்பித்த தருணம் நோயாளி சுயநினைவற்று இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்.

அச்சமயம் வேறு ஒரு தாதி சென்று பார்த்தபோது நோயாளி இறந்ததை உறுதிப்படுத்தி மீண்டும் வைத்தியரிற்கு தொடர்பை ஏற்படுத்தி நிலமையை விளக்கியுள்ளார்.

பின்னர் காலை 6.20 மணியளவில் விடுதிக்கு வந்த வைத்தியர் ஏற்கனவே இறந்துபோய் இருந்த நோயாளிக்கு முதலுதவி வழங்குவது போல நடித்து நோயாளி 7.30 மணியலவிலேயே இறந்ததாக பொய்யான அறிக்கை எழுதியுள்ளார்.

அவசர சிகிச்சை தேவையான நோயாளியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சையளிக்காமல் தாமதித்தமையால் அவருடைய உயிர் பிரிந்தமைக்கு வைத்தியசாலையின் நிர்வாகமே காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்து நோயாளி உயிரிழந்தமை தொடர்பில் தமக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருமாறு உயிரிழந்தவரின் மனைவி கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இம்மரணம் தொடர்பில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கேட்டபோது தாம் சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ் இளைஞனின் மரணத்திற்கு பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த குறித்த பெண் மருத்துவரே முழுக்காரணம் என தெரியவருகின்றது.கவனயீனத்தால்
விடுதி வைத்தியர் என அழைக்கப்படும் ஆரம்ப மருத்துவரான அவர் நோயாளி அனுமதி நாட்களில் விடுதியிலேயே இருக்க வேண்டும் என்பதே நடைமுறை என்றும் அங்கு அவர்கள் தங்குவதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே குடும்பமாக வெளியில் தங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் குறித்த மருத்துவரை காப்பாற்றும் நோக்கில் பல உள்ளக விளையாட்டுக்கள் இடம்பெற்று வருவதாகவும், தற்சமயம் குறித்த மருத்துவர் மனநல சிகிச்சைக்கு தானாக சென்றுள்ளதகவும் தெரியவருகின்றது.

மேலும் இவர் பெரும்பாலான நாட்களில் தொலைபேசி மூலமே தாதியர்களிற்கு நோயாளி பாராமரிப்பை பற்றி கட்டளை இடுவதாகவும் இனமத பாகுபாடு காட்டுவதாகாவும் ஊழியர்கள் சார்பில் குற்றம் சாட்டப்படுள்ளது.

இதேவேளை, குறித்த நோயாளியை வைத்தியர் உடனடியாக பார்வையிட்டு குருதி மாற்றீடு செய்திருந்தால் அவர் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என விடுதிக்கு பொறுப்பான மருத்துவ நிபுணர் கவலையோடு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.