புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவிலிருந்து இலங்கை வந்த நாகசுந்தரமும் அவரது சகோதரரும் விபத்தில் பலி!!

கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 15ம் திகதி அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், பெண்ணொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக குடுபத்தினர் தெரிவிக்கையில், கொழும்பு – பம்பலப்பிட்டியில் உள்ள சகோதரி சுகவீனமடைந்த நிலையில், அவரை சுகநலம் விசாரிப்பதற்காக 14ம் திகதி செவ்வாய்க்கிமை மாலை 5 மணியளவில் திருக்கோவிலில் இருந்து அவர்களுடைய காரில் கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளனர்.

இந்நிலையிலேயே கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இரு சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்த, திருக்கோவிலை பூர்வீகமாக கொண்ட தங்கராசா நாகசுந்தரம் (70) மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த அவரது சகோதரர் தங்கராசா கேதாரவரதசுந்தரம் (74) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.

உயிரிழந்த நாகசுந்தரத்தின் மனைவி சாருமதி மற்றும் உயிரிழந்த கேதாரவரதசுந்தரத்தின் மகன் ஜசிகாந்த ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.