யாழில் போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது..!
புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அச்சுவேலி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி போலீஸ் பரிசோதகர் பிரபாத் தெரிவித்தார். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து, 87 போதை மாத்திரை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 மற்றும் 27 வயது உடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக போதை மாத்திரை வில்லலகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். சிவில் உடையில் சென்ற பொலிசார், தாமும் போதை மாத்திரை வாங்குவது போல் பாசாங்கு செய்து சந்தேக நர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

