நாளை மாவீரர் தின நிகழ்வுகள் கொண்டாடுவதற்கு யாழ் பல்கலைக்கழகத்தில் தடை!!

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் 26, 27ம் திகதிகளில் எந்தவொரு நிகழ்வும் நடத்தக் கூடாதென, பல்கலைகழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் ச.கந்தசாமி அறிவித்துள்ளார்.

பல்கலைகழக வளாகத்திற்குள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாமென சகல மாணவர்களிற்கும் அறிவிக்கும்படியும், சுமுகமான நிலைமையை ஏற்படுத்த ஒத்துழைக்கும்படியும் அவர் எழுத்துமூலம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளார்.

வருடம்தோறும் கார்த்திகை 27 அன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் மாவீரர் நாள் நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்கள் நினைவு கூரப்பட்டு வருவது வழமை.

இந்நிலையில் இம்முறையும் கார்த்திகை 27 ஆம் திகதி யான நாளை மாவீரர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் யாழ் பல்கலைகழக தகுதிவாய்ந்த அதிகாரியான கந்தசாமியின் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்றும் நாளையும் எந்த நிகழும் நடத்தப்படக் கூடாது என தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது

No photo description available. No photo description available.

error

Enjoy this blog? Please spread the word :)