FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

2021ஆம் ஆண்டில் முஸ்லிம் இராச்சியமா இலங்கை…?? : திடுக்கிடும் தகவல் இதோ …!!

இலங்கையில் 2021ஆம் ஆண்டில் முஸ்லிம் இராச்சியம் ஒன்றை அமைப்பதே உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹசீமீன் இலட்சியமாக இருந்தது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சஹ்ரான் உள்ளிட்ட ஏனைய ஆறு தற்கொலைக் குண்டுதாரிகளின் இலட்சியமும் இதுவே என தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிய விசேட புலனாய்வு விசாரணைகள் சம்பந்தப்பட்ட ஊடகத் தரப்பு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரதான தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் மற்றும் ஏனைய தற்கொலைக் குண்டுதாரிகளுடன் தொடர்புடைய பல்வேறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.

அவர்களிடம் பெறப்படும் தகவல்கள் மூலம் சஹ்ரான் மற்றும் அவருடைய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய பல சந்தேகநபர்களை விசேட குற்றப்புலானாய்வுப் பிரிவினர் தொடர்ந்து கைது செய்து வருவதுடன் இவை பற்றிய தகவல்களும் ஊடகங்களில் தொடர்ந்து தினமும் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ஏற்கனவே புலனாய்வு விசாரணைகளிலிருந்து பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில் கடந்த 18ஆம் திகதி அலவத்துகொட பிரதேசத்தில் வைத்து இலங்கை நாடாளுமன்ற ஹன்சாட் பிரிவில் பணியாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

இவரிடம் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு உத்தியோகத்தர்கள் பின்னர் அவருடன் நாடாளுமன்றத்தில் அவர் பணியாற்றிய ஹன்சாட் பிரிவுக்குச் சென்று சோதனையிட்டபோது அங்கு அவர் பயன்படுத்திய கணினிப் பதிவுகள் மூலமும் அவரும் சஹ்ரான் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வகையில் ஏனைய சந்தேகநபர்களிடம் பெற்றுக்கொண்ட தகவல்களைவிட முக்கியமான பல்வேறு தகவல்களை குறித்த நாடாளுமன்ற ஹன்சாட் உத்தியோகத்தர் மூலம் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுள்ளனர் என தெரியவருகின்றது.

அந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே சஹ்ரானின் இஸ்லாமிய இராச்சியம் பற்றியும் அதற்காக நாடெங்கும் சஹ்ரான் முஸ்லிம் மக்களிடையே மேற்கொண்டு வந்த இஸ்லாமிய இராச்சியம் சம்பந்தப்பட்ட தீவிரவாத மதப் போதனைகள் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.