இத்தாலியில் கொறோனா தொற்று!! யாழ் முதியவர் பலி!! குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது!!
கொரோனா தொற்றினால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையிலிருந்து இத்தாலி சென்றிருந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியிருக்கலாமென இத்தாலிய சுகாதார அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.
கொழும்பில் வசிக்கும் யாழ்ப்பாணம் வடமராட்சி, நெல்லியடியை சேர்ந்த தம்பதியினர் அண்மையில் இத்தாலிக்கு சென்றிருந்தனர். அங்குள்ள தமது மகளின் குடும்பத்திடம் சென்றிருந்தனர்.
அங்கு திடீர் சுகவீனமுற்று முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் கொரோனா தொற்றின் அறிகுறிகளுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது இறப்பிற்கு கொரோனா தொற்றும் காரணமாக இருக்கலாமென்ற சந்தேகத்தில், அந்த குடும்பத்தை இத்தாலிய அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை இறுதிச்சடங்கிற்காக இலங்கை கொண்டு செல்லவும, இத்தாலிய அதிகாரினள் அனுமதிக்கவில்லை. இதனால், இறுதிச்சடங்குகள் சில தினங்களின் முன்னர் இத்தாலியிலேயே நடைபெற்றது.

