ரணில் வென்றது எப்படி?? எம்.பிகளின் மனைவிகளை தன்வசப்படுத்திய ரணல்!! நடந்தது என்ன?
ணிணில் எப்படி வெற்றிக்கொடியை நாட்டினார் என்பதை விரிவாக எழுத நேரமில்லை…
அதனால் , அதனை பிறகு விரிவாக தருகிறேன்…
ஆனால் அதற்கு முன்னர் ,ரணிலுக்கு கொஞ்ச எம்.பிக்களின் ஆதரவு கிடைத்த காரணமொன்றை குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்..
இதை வாசிக்கும்போது நகைப்பாக இருந்தாலும் , உண்மையில் இப்படியொரு சம்பவம் பதிவாகியது..
நேற்று மாலை மாதிவெல எம்.பிக்கள் விடுதி வளாகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களோடு லொறியொன்று வந்து நின்றது… அதிலிருந்து எல்லா எம்.பிக்களின் வீடுகளுக்கும் கட்டணத்துடன் சிலிண்டர் விநியோகம்…
பல எம்.பிக்களின் வீட்டு ஆட்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ..
”கோட்டாவும் இருந்தாரே.. இப்படி என்றைக்காவது செய்திருப்பாரா.. பேசாம இவருக்கே சப்போர்ட் பண்ணி ஏதாவது நல்லது கிடைக்க வழி செய்யுங்க..” என்று எம்.பி மாரின் வீடுகளில் உபதேசம் ஆரம்பித்தது.
எம்.பிமாரின் ஹோம் மினிஸ்ட்ரியை சரிசெய்தால் எம்.பி மாரை சரி செய்யலாம் என்று நினைத்துவிட்டாரோ ரணில்…
ஏற்கனவே எரியுண்ட எம்.பிக்கள் வீடுகளை புனரமைக்க உதவி செய்வதாகக் கூறி அமைச்சரவை பத்திரமொன்றுக்கு அனுமதியளித்து அரசியல்வாதிகளின் குடும்பங்களின் நன்மதிப்பை பெற்றார் ரணில்…
இன்று நாடாளுமன்றத்தில் இருந்துவரும்போது திடீரென காரைவிட்டு இறங்கி ,படையினரை சந்தித்து அவர்களுடன் அளவளாவி அவர்களின் சேவையை பாராட்டினார்…..
இவ்வளவு நாளும் வெறும் ‘எக்டிங்’ ஜனாதிபதியாக இருந்த ரணில் , நிஜ ‘எக்டிங்’ ரணிலாக இப்போதுதான் மாறிக்கொண்டிருக்கிறார்…
இது பேஸ்புக் பதிவாகும்

