புதினங்களின் சங்கமம்

யாழில் பிரசவ வலியால் துடித்த பெண்னை உரிய நேரத்தில் வழி செய்த பொலிசார்!!

நேற்று (20) யாழ். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பிரசவ வலியினால் துடித்த வேளை வட்டுக்கோட்டை பொலிஸார் தமது பொலிஸ் வாகனத்தை கொடுத்து அந்தப் பெண்ணிற்கு உதவி செய்த சம்பவம் பாரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணொருவரிற்கு பிரசவ வலி ஏற்பட்டவேளை அவரை முச்சக்கர வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்தவேளை திடீரென முச்சக்கர வண்டியில் இருந்த பெற்றோல் தீர்ந்து போனது.

இதனை அவதானித்த வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வண்டிக்கு பெற்றோல் வழங்கியும் முச்சக்கர வண்டி இயங்கவில்லை இதனை அவதானித்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸாருக்கு சொந்தமான வாகனத்தினை வழங்கி குறித்த கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு வழி செய்தார். வட்டுக்கோட்டை பொலிஸாரின் இந்த நெகிழ்ச்சிகரமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.