நான் ஜனாதிபதியானால் சுவிஸ்குமாருக்கு பொதுமன்னிப்பு!! கூறுவது யார்?
தற்போது இலங்கையில் நடக்கும் அரசியல் குளறுபடிகளின் உச்சபட்ச சம்பவங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந் நிலையில் தற்செயலாக பாராளுமன்றில் போட்டியிடாமலே (யாராவது ஒரு தேசியப்பட்டியல் எம்.பி மரணித்தால்) நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக மாறி பின்னர் ரணிலைப் போல் ஜனாதிபதியானால் என்ன செய்வீர்கள் என்பதை கூறுவீர்களா?? என சமூகவலைத்தளம் ஒன்றில் வெளியாகிய பதிவு ஒன்றுக்கு கீழே கொடுக்கப்பட்ட கொமன்ஸ்களில் சிலவற்றை இங்கு தந்துள்ளோம். உங்களுக்கும் நல்ல யோசனைகள் தோன்றினால் அவற்றையும் எமது வலைத்தளத்தில் பதிவிடுங்கள்…. நன்றி
1) சுவிஸ்குமார் உட்பட்ட 9 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்குவேன். சுவிஸ்குமாரை சுவிஸ்லாந்துக்கு அனுப்பி அவரது முன்னர் அவர் எவ்வாறு உழைத்தாரோ அதே உழைப்பை டொலர்களாக இலங்கைக்கு கொண்டு வந்து சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த வழி செய்வேன்.
2) சுமந்திரனை வெளிவிவகார அமைச்சராக்கி புலம்பெயர் தமிழர்களை பேயர், மடையர்களாக மாற்றி அவர்களின் சேமிப்பை இவங்கைக்கு டொலர்களாக அனுப்ப வழி செய்வேன்.
3) அங்கஜனை மீண்டும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக நியமித்து யாழ்ப்பாண இளைஞர்கனை அரச உத்தியோக கனவில் மிதக்கச் செய்து சிங்களப் பௌத்தர்களை எந்தவிதத்திலும் எதிர்க்காத நிலைக்கு கொண்டு வருவேன்.
4) டக்ளஸ்தேவானந்தாவுக்கு விவசாய அமைச்சு கொடுத்து தீவகத்தில் கஞ்சா மற்றும் புகையிலைச் செய்கையை ஊக்குவித்து அவற்றை ஏற்றுமதி செய்து அந்நிய செலவானியை பெற்றுக் கொள்வேன்…
5) எரிவாயுப் பிரச்சனையை தீர்ப்பதற்காக சகல வீடுகளிலும் உள்ள மலசலகூடங்களை இயற்கை உயிர்வாயு தயாரிக்கும் கூடங்களாக மாற்றியமைத்து சமையல் எரிவாயுப் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன்.

