நாட்டை விட்டு தப்பி ஓடும் வைத்தியர்கள்..!
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகமாக காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
சில வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் பல நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
