முல்லைத்தீவு தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் உடைத்து கொள்ளை எடுக்கும் CCTV காட்சி!!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரல் ஆலயத்தின் உண்டியல் உடைக்பப்பட்டு திருடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று07.12.21 இரவு பதிவாகியுள்ளது.
ஆலயம் பாதுகாப்பாக பூட்டப்பட்ட வேளை மணிகோபுரம் ஊடாக ஏறி ஆலுயத்திற்குள் இறங்கிய திருடன் ஆலய மண்டபத்தில் மூலவருக்கு நேராக வைக்கப்பட்ட உண்டியலை எடுத்துக்கொண்டு வைரவர் சன்னிருக்கு அருகில் உள்ள ஓடையில் இரும்பு கம்பியால் உடைத்து உண்டியலில் உள்ள பணங்கள் திருடிக்கொண்டு சென்றுள்ளான
ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரிவி கமராவில் திருடனின் வருகை பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஒட்டுசுட்டான் ஆலுய நிர்வாகத்தினர் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் இராஜகோபுர கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இந்த வேளையில் கொள்ளைச்சபம்பவம் பதிவாகியள்ளதுடன் கடந்த ஒருமாதகாலமாக உண்டியலில் உள்ள பக்த்தர்களின் காணிக்கைகள் எடுத்துக்கொள்ளளப்படவில்லை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

