பேரழகியாக ஜொலிக்கும் த்ரிஷா: குந்தவை ஃபர்ஸ்ட் லுக் இதோ!!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் பொன்னியின் செல்வன். பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தின் புதிய உதயம்; முதல்வர் செம ப்ளான்… பூரிப்பில் அமைச்சர்!

ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், நந்தினியை அடுத்து இளவரசி குந்தவையின் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

கம்பீரமான அழகியாக த்ரிஷா போஸ் கொடுத்திருக்கிறார். போஸ்டரை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

குந்தவை மிகவும் அழகாக இருக்கிறார். மணிரத்னம் த்ரிஷாவை தேர்வு செய்தது மிகவும் சரி. எங்கள் இளவரசி வந்துவிட்டார்.

சுந்தர சோழரின் மகள். ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் ஆகியோரின் சகோதரி, எங்கள் இளவரசி வந்துவிட்டார். வந்தியத்தேவன், குந்தவை இடையேயான கெமிஸ்ட்ரியை பார்க்க ஆவலாக இருக்கிறது என்கிறார்கள்.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க ரசிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வார்த்தைகளாலேயே நம்மை பொன்னியின் செல்வன் உலகிற்கு அழைத்துச் சென்றார் கல்கி. அதை மணிரத்னம் எப்படி திரையில் கொண்டு வந்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

error

Enjoy this blog? Please spread the word :)