துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக மருத்துவமனைக்கு விரைந்த சி.ஐ.டியினர்!
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்ததுடன், அவரை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்தது.
இந்நிலையில் அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய துமிந்த சில்வா, தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரை சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார். ஜனாதிபதியும் இவ்வாறான அறிவுறுத்தலை எடுத்துள்ளதாக தெரிகிறது.
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றத்தினால் சில்வாவை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
