யாழில் சீதனம் கேட்ட பட்டதாரி காதலன்!! கனடா மாப்பிளையை கட்டிய காதலி!! சற்று முன் கலியாண மண்டபத்தில் குழப்பம்!!
யாழில் உள்ள பிரபல கலியாண மண்டபத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அந்த மண்டபத்தில் இரு பகுதிகளில் வெவ்வேறானவர்களுக்கு திருமண வைபவம் நடந்து கொண்டிருந்தது. அந் நேரத்தில் 3 மோட்டார் சைக்கிளில்களில் வந்த 6 பேர் அந்த மண்டபத்தின் அருகில் நின்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்துள்ளனர். இதனால் மண்டபத்தில் இரு திருமண வைபவங்களுக்கும் வந்திருந்தவர்கள் அங்கு கூடியுள்ளனர். அத்துடன் அவர்கள் ஏன் கூச்சல் இடுகின்றார்கள் என தெரியாது மண்டபப் பாதுகாப்புக்கு நின்றவர்கள் அவர்களை விசாரிக்க முற்பட்டுள்ளனர். அப்போது பெண் ஒருவரின் புகைப்படங்களை காட்டி ‘இவள் தன்னுடன் லவ் பண்ணி விட்டு வெளிநாட்டு மாப்பிளையை கலியாணம் கட்டப் போகின்றாள்’ என குக்குரல் இட்டு கத்திக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் தெரிவித்ததுடன் மண்டபத்தின் உள்ளே நுழையவும் முற்பட்டுள்ளான். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதே வேளை அந்த மண்டபத்தில் குறித்த பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் போயுள்ளது. உடனடியாக அங்கு வந்த மணப்பெண்ணின் உறவினர்கள் குக்குரல் இட்டவன் உட்பட அவனுடன் வந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து வைத்துள்ளார்கள்;. அதன் பின்னர் விசாரணையில் தன்னை காதலித்து ஏமாற்றியதால் இவ்வாறு செய்ததாக காதலன் கூறியுள்ளார். இவர்களை பொலிசாரிடம் ஒப்படைக்க முற்பட்ட போது மணப் பெண்ணின் பெற்றோர் மற்றும் கனடா மாப்பிளை ஆகியோரின் வேண்டுகோளில் பிடிபட்ட இருவரும் மதியம் 1 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு வந்து குக்குரலிட்டவர்களில் முன்னாள் காதலன் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற போது அதே பல்கலைக்கழகத்தில் கற்ற குறித்த மணப்பெண்ணை காதலித்ததாகவும் படித்து பட்டதாரியாக வந்தவுடன் பெருமளவு சீதனம் மற்றும் வீடு போன்றவற்றை கேட்டு தொல்லைப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது. இதனால் இருவரும் சில மாதங்களாக தொடர்புகள் அற்ற நிலையில் இருந்துள்ளார்கள். இவ்வாறான நிலையிலேயே குறித்த பெண் திடீரென இன்று கனடா மாப்பிளையை கலியாணம் கட்டியுள்ளார். பெண்ணின் காதல் தொடர்பாக மாப்பிளைக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியதாகவும் மண்டபத்தில் நின்றவர்களுக்கு மாப்பிளையின் உறவுகள் கூறினர். கனடா மாப்பளை மணமகளின் உறவுக்காரர் எனவும் தெரியவருகின்றது.
இதே வேளை அதே மண்டபத்தில் நடந்த மற்றைய திருமணத்திலும் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கலியாணத்திற்கு தயாராக நின்ற மணப்பெண்ணின் காதலன்தான் வந்து கத்துவதாக நினைத்து மணமகனின் உறவுகள் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.

